Home /News /vellore /

லாரி மீது பைக் மோதி விபத்து - மனைவி கண்முன்னே கணவன் உயிரிழந்த சோகம்

லாரி மீது பைக் மோதி விபத்து - மனைவி கண்முன்னே கணவன் உயிரிழந்த சோகம்

சாலை விபத்து

சாலை விபத்து

Ranipettai | இரு பிள்ளைகளுடன் மனைவியின் அம்மா வீட்டிற்கு சென்ற கணவர் நொடிப்பொழுதில் லாரி மீது மோதி விபத்தில் உயிரிழந்தார். மனைவியின் கண்முன்னே தலை துண்டித்து கணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ranipettai (Ranipet), India
    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரு பிள்ளைகளுடன் மனைவியின் அம்மா(மாமியார்) வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்ற போது லாரி மீது மோதிய விபத்தில் கணவன் தலை துண்டாகி மனைவி கண்முன்னே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டம் ஆரியகுப்பம் பகுதியை சேர்ந்தவர் விஜயபாபு. ஓட்டுநரான இவருக்கும் வேலூரை சேர்ந்த அனுசியாவிற்கும் திருமணமாகி முகேஷ்(12) என்ற மகனும், சோபியா(6) எனும் மகளும் உள்ளனர். இந்த நிலையில் விஜயபாபு தனது குடும்பத்துடன் வேலூரில் உள்ள மாமியார் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே வந்த போது கட்டுபாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விஜயபாபு, மனைவியின் கண்முன்னே தலை துண்டாகி உயிரிழந்தார்.

    அதே போல் அனுசியாவும், இரு பிள்ளைகளும் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக அவளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாமியார் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றவர் விபத்தில் சிக்கி தலை துண்டாகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதிமக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்:க.சிவா, ராணிப்பேட்டை
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Crime News, Husband died, Ranipettai, Road accident, Vellore

    அடுத்த செய்தி