ஹோம் /நியூஸ் /வேலூர் /

எல்லா கடனையும் தள்ளுபடி செய்தால் எப்படி ஆட்சி நடத்துவது- கூட்டுறவு சங்க நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு

எல்லா கடனையும் தள்ளுபடி செய்தால் எப்படி ஆட்சி நடத்துவது- கூட்டுறவு சங்க நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு

துரைமுருகன்

துரைமுருகன்

அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை உப்பு சப்பில்லாதது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Vellore, India

  கூட்டுறவுத்துறை என்றாலே கடன் தள்ளுபடி செய்வார்கள் என்றால் எப்படி ஆட்சி நடத்துவது என்றும் கூட்டுறவு கடன் வாங்கியவர்கள் முழுமையாக கட்ட வேண்டும் என்றும் அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார்.

  காட்பாடி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் 69 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

  இந்த விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கதிர் ஆனந்த் ,ஜெகத் ரட்சகன் , சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார் , அமுலு உள்ளிட்டோரும் உள்ளாட்சி பிரதிநிதிகள் திரளானோர் கலந்துகொண்டனர்.  இதில் சிறப்பு விருந்தினராக தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு,

  1248 பயனாளிகளுக்கு ரூ.15.  41 கோடி கடன் உதவியை வழங்கினார்.

  நிகழ்ச்சியில், நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்,  ‘கூட்டுறவுத்துறையில்  மக்கள் வாங்கிய கடனை எல்லாம் தள்ளுபடி செய்தால் எப்படி சர்கார் நடக்கும்.  பயிர்கடன் ,கால்நடை கடன் மாற்றுத்திறனாளிகள் கடன் இப்படி வாங்கிய அனைத்து கடனையும் எப்படி ஒரு சர்க்கார் தள்ளுபடி செய்ய முடியும்.

  சர்கார் சரியாக நடக்க வேண்டும் என்றால்  வாங்கிய கடனை ஒழுங்காக திருப்பி செலுத்த வேண்டும்.  எப்படியிருந்தாலும் தள்ளுபடி செய்வார்கள் என்ற நிலைமை வந்துவிட கூடாது. கடனை திருப்பி கட்டும் நல்ல உணர்வோடு இருக்க வேண்டும்’  என பேசினார்.

  இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,  தென் பென்னை ஆறு நீர் பகிர்வு குறித்து பேச செயலாளர் சென்றுள்ளார் ,பின்னர் அதை பற்றி தெரிவிக்கிறேன் என்றார். தமிழக ஆளுநர் தவறுகள் நடந்தால் நாங்கள் கேட்க அதிகாரம் உள்ளது என கூறியுள்ளது குறித்த கேள்விக்கு, பாவம் கவர்னர் அவர் எதையாவது சொல்லுவார் என துரைமுருகன் பதிலளித்தார்.

  இதையும் படிங்க: “நீங்கள் யாருடைய ரப்பர் ஸ்டாம்ப்னு எங்களுக்கு தெரியும்” - ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதிலடி கொடுத்த சு.வெங்கடேசன்!

  மேலும், தமிழகத்தில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை உப்பு சப்பில்லாதது என்றும் அவர் ஆதாரபூர்வமாக தெரிவிக்கட்டும் அப்போது அதைப்பற்றி கவனிக்கிறேன் என்றார்

  செய்தியாளர்: செல்வம் - வேலூர்

  Published by:Murugesh M
  First published:

  Tags: DMK, Durai murugan, Vellore