Home /News /vellore /

சீராக தலைமுடியை வெட்டாமல் பள்ளி வந்த மாணவர்களின் தலைமுடியைத் திருத்தச் செய்த தலைமையாசிரியர்!

சீராக தலைமுடியை வெட்டாமல் பள்ளி வந்த மாணவர்களின் தலைமுடியைத் திருத்தச் செய்த தலைமையாசிரியர்!

ஒரு மாணவருக்கு 100 ரூபாய் என்ற வீதம் 65 மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் அவரின் சொந்த பணத்தில் இருந்து ரூ.6,500-ஐ கொடுத்து முடித்து திருத்தத்தை செய்தார்.

    வேலூர் அருகே சீராக தலைமுடியை வெட்டாமல் பள்ளிக்கு வந்த 65  மாணவர்களின் தலைமுடியை பள்ளியிலேயே சீராக திருத்தச் செய்த தலைமையாசிரியர். 

    கடந்த 20ம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு செய்தார். அதன் பின்னர்,
     பள்ளிக்கு தலை முடியை சீராக வெட்டி கொண்டு வராத மாணவர்கள் முடியை சீராக வெட்டி கொண்டு வரவேண்டும்.

    பள்ளி மாணவர்களுக்கு சீராக தலைமுடியை வெட்டாத முடி திருத்தும் நிலையங்களுக்கு சீல் வைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

    இந்த அறிவிப்பை அடுத்து இன்று ஊரிசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆய்வு செய்த தலைமையாசிரியர் எபினேசர், தலைமுடியை சீராக வெட்டாமல் வந்த 65 மாணவர்களை தனியாக அமர வைத்து முடிதிருத்துவோரை வரவழைத்து பள்ளியிலேயே அவர்களுக்கு சீராக முடியை வெட்டவைத்தார்.

    ஒரு மாணவருக்கு 100 ரூபாய் என்ற வீதம் 65 மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் அவரின் சொந்த பணத்தில் இருந்து ரூ.6,500-ஐ கொடுத்து முடித்து திருத்தத்தை செய்தார்.

    இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தலைமையாசிரியர் எபினேசர் கூறியதாவது, பள்ளி மாணவர்களின் ஒழுக்கத்திற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தல்படி மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு  முடி வெட்டப் பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் தொடர்ந்து மற்ற மாணவர்களையும் ஆய்வு செய்து அவர்களுக்கு சரியான முறையில் முடி திருத்தம் செய்யப்படும் என்றார்.

    முன்னதாக, மாவட்ட ஆட்சியர் இந்த அறிவிப்பை தொடர்ந்து, 
    முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கத்தினர் ஆட்சியர் அறிவித்திருந்த இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இல்லையென்றால் நாங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்  என ஏற்கனவே தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர் - செல்வம்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Vellore

    அடுத்த செய்தி