முகப்பு /செய்தி /வேலூர் / தொடர் கனமழையால் வேலூர் மாவட்டத்தில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர்..

தொடர் கனமழையால் வேலூர் மாவட்டத்தில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர்..

தெருக்களை சூழ்ந்த மழைநீர்

தெருக்களை சூழ்ந்த மழைநீர்

Vellore District News : தொடர் மழையால் வேலூர் மாவட்டம் கன்சால்பேட்டை  பகுதியில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Vellore, India

வேலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக கன்சால் பேட்டை பகுதியில் குடியிருப்பு பகுதியில் கழிவு நீருடன் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில் வேலூரில்  பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வேலூர் கன்சால்பேட்டை, இந்திராநகர் போன்ற பகுதிகளில் கழிவு நீருடன் மழை நீரும் சேர்ந்து குடியிருப்பு பகுதிகளில் புகுந்து உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாயை சரிவர தூர்வாராதது இதற்கான காரணம் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க : புயல் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குட்! தமிழக அரசை பாராட்டிய ராமதாஸ்

மேலும், மழைநீர் தெருக்களில் முழுவதுமாக தேங்கியுள்ளது. அருகில் உள்ள கால்வாய் முழுவதுமாக நிரம்பி மழை நீருடன் சேர்ந்து குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள் வீடுகளில் உள்ளே உடனே வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் வெளியே வர வேண்டும் என்றால் தண்ணீரில் இறங்கி வெளியே வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் அவர்கள் வெளியே வராமல் தவித்து வருகின்றனர்.தகவல் அறிந்து அங்கு சென்ற வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் குடியிருப்பு பகுதிகளுக்கு நீர்செல்வதை தடுக்க மணல் மூட்டைகள் மூலம் தடுப்பணை அமைத்து மாற்று வழியில் செல்ல நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

மேலும், மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்ற உத்தரவிட்டார். அதன்படி தற்போது பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் நேரத்தில் இதேபோல்  தண்ணீர் தேங்கி வருகிறது. இந்த பிரச்சனையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் நிரந்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களை எதிர்பார்க்கின்றனர்.

செய்தியாளர் : செல்வம் - வேலூர்

First published:

Tags: Cyclone Mandous, Heavy rain, Local News, Vellore, Weather News in Tamil