ஹோம் /நியூஸ் /வேலூர் /

அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் : சத்துவாச்சாரி திமுக மாமன்ற உறுப்பினர் மீது வழக்குபதிவு

அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் : சத்துவாச்சாரி திமுக மாமன்ற உறுப்பினர் மீது வழக்குபதிவு

அரசு அதிகாரியிடம் வாக்குவாதம் செய்யும் திமுக பிரமுகர்

அரசு அதிகாரியிடம் வாக்குவாதம் செய்யும் திமுக பிரமுகர்

Vellore Dmk Councillor News | தன் மீது ஏற்கனவே மூன்று கொலை வழக்குகள் உள்ளதாகவும் ஒன்றும் செய்ய முடியாது என அதிகாரியை திமுக மாமன்ற உறுப்பினர் மிரட்டியதாக புகார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Vellore, India

சத்துவாச்சாரியை  திமுக மாமன்ற உறுப்பினர் அரசு அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக  மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியை சேர்ந்த திமுகவின் 24 ஆவது வார்டு வேலூர் மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர் சுதாகர், இவர்  மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மூலைக்கொல்லை பகுதியில் மண் திருடு போவதாகவும் அதனை தடுக்க வேண்டுமெனவும் கடந்த திங்கட்கிழமை புகார் மனுவை அளித்தார்.

இதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில் வேலூர் வட்டாச்சியர் மற்றும் சத்துவாச்சாரி வருவாய் ஆய்வாளர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். இதில் புகார் மனுவை அளித்த திமுக மாமன்ற உறுப்பினர் சுதாகரே அனுமதியில்லாமல் சட்டத்திற்கு புறம்பாக மண் எடுத்து செங்கல் சூளை நடத்துவதும் கண்டுபிடித்து அங்கிருந்த கிராம உதவியாளர் அவைகளை தனது செல்போனில் படம் பிடித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனால் ஆத்திரமடைந்த சுதாகர் சத்துவாச்சாரி வருவாய் அலுவலகத்திற்கு சென்று வருவாய் ஆய்வாளர் யுவராஜுக்கு சுதாகர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தன் மீது ஏற்கனவே மூன்று கொலை வழக்குகள் உள்ளதாகவும் ஒன்றும் செய்ய முடியாது என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் வருவாய் ஆய்வாளர் யுவராஜ் சத்துவாச்சாரி காவல்நிலையத்தில் மாமன்ற உறுப்பினர் சுதாகர் மீது புகார் அளித்ததன் அடிப்படையில் மூன்று பிரிவுகளின் கீழ் சத்துவாச்சாரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திமுக மாமன்ற உறுப்பினர் சுதாகரே சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு மற்றவர்கள் மாட்ட வேண்டுமென அளித்த புகாரில் அவரே சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் : செல்வம்

First published:

Tags: Local News, Vellore