ஹோம் /நியூஸ் /வேலூர் /

கடன் வாங்கி விவசாயம்.. மொத்தமா போச்சு.. தீயிட்டு கொளுத்திய விவசாயி.. வேலூரில் சோகம்!

கடன் வாங்கி விவசாயம்.. மொத்தமா போச்சு.. தீயிட்டு கொளுத்திய விவசாயி.. வேலூரில் சோகம்!

விவசாய நிலத்திற்கு தீ வைத்த விவசாயிகள்

விவசாய நிலத்திற்கு தீ வைத்த விவசாயிகள்

மழையால் சேதம் அடைந்த பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Vellore, India

வேலூர் மாவட்டம் பொன்னை அருகே உள்ள கொண்டா ரெட்டி பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார்( வயது 45 ). இவருக்கு சொந்தமான நிலத்தில் 5 ஏக்கர் நெற்பயிர் நடவு செய்திருந்தார். பயிருக்கு இன்சூரன்ஸ் செலுத்தியிருந்தார். நன்றாக வளர்ந்து வந்த நெற்பயிர் விளையும் தருவாயில் இருந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் பெய்த தொடர்மழை காரணமாக நெற்பயிர் முற்றிலும் சேதம் அடைந்தது.

இது குறித்து சிவக்குமார் இன்சூரன்ஸ் அதிகாரியிடம் தகவல் தெரிவித்தார். ஆனால் அவர்கள் இன்சூரன்ஸ் பணம் தரவில்லை. மேலும் அந்தப் பகுதியில் சேதமடைந்த பயிர் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதிலும் இவரது நிலத்தில் சேதம் அடைந்த பயிர்கள் குறித்து பதிவு செய்யப்படவில்லை.

இதனால் விரத்தி அடைந்த விவசாயி சிவகுமார் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சேர்ந்து 5 ஏக்கர் நிலத்தில் இன்று காலை பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். நெற்பயிரில் தீ வேகமாக பரவியது. இது குறித்து தகவல் அறிந்த பொன்னை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

Also see... பகலிலேயே இரவான கொடைக்கானல்.. தரையிறங்கிய‌ அடர்மேகக் கூட்டங்களால் வெளிச்சமின்மை!

சுமார் 20 சதவீதம் வரை நெற்பயிர்கள் எரிந்து கொண்டிருந்தபோது தீ அணைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மழையால் சேதம் அடைந்த பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

First published:

Tags: Farmer, Vellore