வேலூர் மாவட்டம் காட்பாடி பள்ளிக்குப்பம் கிராமத்தில் கால்நடைத் துறையின் கோமாரி நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. இதனை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார். நிகழ்வில் கால்நடைகளுக்கு தடுப்பூசிகளும் போடப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், “வேலூர் மாவட்டத்தில் சில பகுதிகள் நிலநடுக்கம் வரும் பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ளது கடந்த ஆண்டும் அதற்கு முன்பும் நிலநடுக்கம் வந்தது.
வேலூரைப் பொறுத்தவரை பாதுகாப்பான பகுதியில்தான் இருக்கிறோம். தற்போது உலகளாவிய அளவில் பெரிய நிலநடுக்கங்கள் வந்துள்ளன. அதன் தாக்கம் காரணமாக ஏற்கனவே நிலநடுக்கம் வந்த பகுதிகளில் லேசான நில அதிர்வு மீண்டும் வரலாம் என மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளது. அதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியிலுள்ள மக்களுக்கு மாற்று இடங்களில் வீடுகள் கட்டி தர நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.
அகரம்சேரியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்கா ஒன்று தொடங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்த அவர், “பள்ளிகொண்டா உழவர் சந்தை பணிகள் 60 சதவிகிதம் முடிவடையும் நிலையில் உள்ளது. கோமாரி நோய் தடுப்பூசியை மக்கள் பயன்படுத்தி கால்நடைகளை பாதுகாக்க வேண்டும்” என கூறினார்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Earthquake, Local News, Vellore district