திமுக பொதுச்செயலாளர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் படியில் சறுக்கி கீழே விழ முற்பட்டபோது அவர் பின்னே வந்து கொண்டிருந்த அவரது மகன் தாங்கி பிடித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், நிகழ்ச்சி முடிவில் மேடையில் இருந்து கீழே இறங்கினார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கே வி குப்பம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கலந்து கொண்டு இறங்கும் போது தவறி கீழே விழும் போது கட்சித் தொண்டர்கள் தாங்கிக் பிடிக்கும் காட்சி#duraimurugan#KathirAnand#DMK#news18tamilnadupic.twitter.com/UgWfUSSQev
— News18 Tamil Nadu (@News18TamilNadu) November 28, 2022
அப்போது கூட்ட நெரிசலில் நிலை தடுமாறிய அவர், பின் பக்கம் சாய்ந்து கீழே விழ முற்பட்டார். அப்போது அவர் பின்னே வந்து கொண்டிருந்த அவரது மகனும் சட்டமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்த் அவரை தாங்கி பிடித்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK cadres, Durai murugan, Kathir anand