Home /News /vellore /

கஞ்சா போதையில் வம்பிழுத்த வாலிபர்.. சவரக்கத்தியால் வெட்டிக்கொலை - அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

கஞ்சா போதையில் வம்பிழுத்த வாலிபர்.. சவரக்கத்தியால் வெட்டிக்கொலை - அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

கொலை செய்யப்பட்ட இளைஞர்

கொலை செய்யப்பட்ட இளைஞர்

Crime : அரக்கோணம் பகுதியில் கஞ்சா போதையில் வம்பிழுத்த நபர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    அரக்கோணத்தில் கஞ்சா போதையில் வாலிபரை வம்புக்கு இழுத்தவரை சவரக்கத்தியால் கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தோல் ஷாப் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து  (வயது 24 ). பெயிண்டராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. மாரிமுத்து நேற்று மாலை மூகாம்பிகை நகர் பகுதியில் உள்ள முடிதிருத்தும் கடை எதிரே நின்றுக்கொண்டு  கஞ்சா போதையில் அவ்வழியாக செல்வோரை வழிமறித்து வம்பிழுத்ததாக கூறப்படுகிறது.

    அப்போது அரக்கோணம் கீழ்குப்பம் இந்திரா நகரை சேர்ந்த இயேசு என்பவரது மகன் மைக்கேல் வயது (24 )என்பவர்  அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அவரையும் மாரிமுத்து வழிமறித்து தகராறு செய்துள்ளார் . இதில் ஆத்திரம் அடைந்த மைக்கேல் முடித்திருத்தும்  கடையில் இருந்த சவரக்கத்தியை எடுத்து வந்து மாரிமுத்துவின் தலை , கழுத்து , மார்பு ஆகிய பகுதிகளில் பலமாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சரிந்தார்.

    Also Read: கையில் சூலம்.. தலையில் கிரீடம்.. அம்மன் அவதாரத்தில் அன்னபூரணி - பக்தி பரவசத்தில் பக்தர்கள்

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் அரக்கோணம் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மாரிமுத்துவை மீட்டு 108 ஆம்புலன்ஸில் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த  மருத்துவர் அவர் ஏற்கனவே  இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுதொடர்பாக நகர போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளி மைக்கேல் என்பவரை கைது செய்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் சம்பவ இடத்திற்கு ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார் கொலை செய்யப்பட்ட  மாரிமுத்துவின் தந்தை கணேசன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் அரக்கோணம் பகுதியில் கஞ்சா போதையில் வாய் வம்புக்கு இழுத்த நபர் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.

     செய்தியாளர்: க.சிவா (ராணிப்பேட்டை)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Arrest, Cannabis, Crime News, Vellore

    அடுத்த செய்தி