Home /News /vellore /

அடி பம்பு, போர்வெல் மீது கால்வாய் அமைத்த புத்திசாலி ஒப்பந்ததாரர்.. வேலூரில் மீண்டும் சம்பவம்!!

அடி பம்பு, போர்வெல் மீது கால்வாய் அமைத்த புத்திசாலி ஒப்பந்ததாரர்.. வேலூரில் மீண்டும் சம்பவம்!!

அடி பம்பு, போர்வெல் மீது கால்வாய் அமைத்த புத்திசாலி ஒப்பந்ததாரர்

அடி பம்பு, போர்வெல் மீது கால்வாய் அமைத்த புத்திசாலி ஒப்பந்ததாரர்

போர்வெல் மீது கால்வாய் அமைத்த ஒப்பந்ததாரர் குட்டி சரவணன் என்பவரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Vellore, India
    வேலூர் மாநகராட்சியில்  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கால்வாய்கள், சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    கடந்த மாதம் சிஎம்சி எதிரே உள்ள சாலையில் இருசக்கர வாகனத்தையும், சாய்நாதபுரம் பகுதியில் ஜீப்பையும் அப்புறப்படுத்தாமல் சாலைப் போட்டிருந்தார்கள். இந்த செய்தி ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரவியதை அடுத்து
    வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு புதிதாக சாலை அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில், தற்போது சத்துவாச்சாரி விஜயராகவபுரம் 2வது தெருவில், அடி பம்பை அகற்றாமலேயே, புதைத்து கால்வாய் கட்டியிருக்கிறார்கள். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் தற்போது இந்த பம்பை அகற்றினர்.

    மேலும் இதே போல் மண்டலம் இரண்டிற்கு உட்பட்ட 45 வது தெருவில் உள்ள போர்வெல்லின் மீது கால்வாயும், பாதி சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் வேலூர் மாநகரம் வார்டு எண் 46ல் இளங்கோ சாலையில் இருந்த போர்வெல் மீது சாலை போடப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் குடிதண்ணீருக்காக பயன்படுத்திக் கொண்டிருந்த ஆழ்துளை கிணற்றை சாலை போடும் பணியின் போது முழுவதுமாக மூடி அங்கிருந்து அப்புறப்படுத்தி இருந்த நிலையில் தற்போது அதன் மீது சாலை போடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்கு அவதிப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து சத்துவாச்சாரி பகுதியில் போர்வெல் மீது கால்வாய் அமைத்த ஒப்பந்ததாரர் குட்டி சரவணன் என்பவரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

    இதேபோல், பணிகளை சரியான முறையில் ஆய்வு செய்யாத பொறியாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாநகர ஆணையர் அசோக்குமார் அறிவித்துள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து சத்துவாச்சாரி பகுதி மக்கள் கூறும்போது, இது போன்ற ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தங்களை ரத்து செய்வது மட்டுமல்லாமல் அவர்கள் மிது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசு பணத்தை வீணடிக்க கூடாது எனவும் வேதனையுடன் தெரிவித்தனர்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Vellore

    அடுத்த செய்தி