Home /News /vellore /

வேலூரில் அடி பம்பு, போர்வெல் மீது கால்வாய் அமைத்த ஒப்பந்ததாரர் கைது - இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு

வேலூரில் அடி பம்பு, போர்வெல் மீது கால்வாய் அமைத்த ஒப்பந்ததாரர் கைது - இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு

அடி பம்பு, போர்வெல் மீது கால்வாய் - ஒப்பந்ததாரர் கைது

அடி பம்பு, போர்வெல் மீது கால்வாய் - ஒப்பந்ததாரர் கைது

Vellore district News: வேலூரில் போர்வெல் மீது கால்வாய் அமைத்த ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்ட்டதுடன் அவர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    வேலூர் மாநகராட்சி சீர்மிகு நகராக (ஸ்மார்ட் சிட்டி) தேர்வு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வேலூர் மெயின் பஜார் தெரு அருகே காளிகாம்மாள் தெருவில் சில மாதங்களுக்கு முன்னர், இருசக்கர வாகனத்தோடு சேர்த்து சாலை போடப்பட்டு இருந்தது. பின்னர், 2 மணி நேரம் போராடி, சிமென்ட் கலவையை உடைத்து பைக்கை எடுத்தனர்.

    இதேபோல, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பெத்தலேகம் 4 ஆவது தெருவில் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படும் போது தெருவில் இருந்த மின்சார சிமென்ட் கம்பங்களை சேர்த்து கால்வாய் தளம் அமைக்கப்பட்டது. கால்வாய்க்குள் தூண்கள் இருப்பதால் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

    இந்நிலையில், இதேபோன்ற நிகழ்வுகள் சமீபத்தில் மீண்டும் அரங்கேறின. வேலூர் சத்துவாச்சாரி விஜயராகவபுரம் 2வது தெருவில், அடி பம்ப்பை அகற்றாமலேயே, அதன் மீதே கால்வாய் கட்டப்பட்டது. இந்த படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனை அடுத்து, அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள்  பம்பை போராடி அகற்றினார்கள்.

    இதே போல் மண்டலம் இரண்டிற்கு உட்பட்ட 45வது தெருவில் உள்ள போர்வெல்லின் மீதும் சாலை அமைக்கப்பட்டது. இது மட்டும் அல்லாமல் வேலூர் மாநகரம் வார்டு எண் 46ல் இளங்கோ சாலையில் இருந்த போர்வெல் மீதும் சாலை போடப்பட்டது. அத்துடன், பொதுமக்கள் குடிதண்ணீருக்காக பயன்படுத்திக் கொண்டிருந்த ஆழ்துளை கிணற்றை சாலை போடும் பணியின் போது முழுவதுமாக மூடியும் இருந்தனர். இதனால் பொதுமக்கள் குடிநீருக்கு அவதிப்படும் நிலைமை ஏற்பட்டது.

    Must Read : பெண்ணுக்கு தொடர்ந்து டார்ச்சர்: காதலன் கைது.. முன்னாள் காதலனுக்கு போலீஸ் வலை

    இந்நிலையில், சத்துவாச்சாரி பகுதியில் போர்வெல் மீது கால்வாய் அமைத்தவரின் ஒப்பந்தம் ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், இதனை சரியான முறையில் ஆய்வு செய்யாத இணை பொறியாளர் செல்வராஜ்க்கு மெமோ கொடுக்கப்பட்டது. இந்த பணியின் முதல் ஒப்பந்ததாரரான சுரேந்தர் பாபு என்பவர் மீது உதவி ஆணையர் செந்தில்குமரன் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கைது செய்யப்பட்ட ஒப்பந்ததாரர்


    இந்த புகாரின் அடிப்படையில் சுரேந்தர் பாபு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது நீர்ப்பாசனப் பணிகளில் காயம் அல்லது தவறான முறையில் தண்ணீரைத் திருப்பி விடுதல், பொது சொத்தை ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

     

    செய்தியாளர் -  செல்வம்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Arrested, Smart City, Vellore

    அடுத்த செய்தி