முகப்பு /செய்தி /வேலூர் / அதிவேகத்தில் வந்த கார் மோதி விபத்து! - நல்வாய்ப்பாய் உயிர்பிழைத்த முதியவர்!

அதிவேகத்தில் வந்த கார் மோதி விபத்து! - நல்வாய்ப்பாய் உயிர்பிழைத்த முதியவர்!

சாலை விபத்து

சாலை விபத்து

காட்பாடி அருகே அதி வேகத்தில் வந்த கார் மிதிவண்டியில் முதியவரை இடித்து விட்டு சென்ற சிசிடிவி காட்சி வெளியானது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Vellore, India

காட்பாடி அடுத்த கீழ் வடுகன்குட்டை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தின் எதிரில் சாலையின் இருபுறமும் கவனிக்காமல் சைக்கிளில் வந்த முதியவர் சாலை கடந்தார். அப்போது திடீரென குடியாத்தத்தில் இருந்து காட்பாடி நோக்கி அதிவேகமாக வந்த கார் அவரை மோதியது.

விபத்தின் அதிர்ச்சியில் சற்று நேரம் மயக்கத்தில் இருந்தவர், அதன் பின்பு சிறிது நேரத்தில் அங்கிருந்து எழுந்து தன்னுடைய சைக்கிளை எடுத்துக்கொண்டு தன்னுடைய சொந்த ஊரான வெங்கடேசபுரத்தை நோக்கி பயணித்தார்.

சுமார் 20 நிமிடமாக அங்கு இருந்த கார் ஓட்டுனர் முதியவர் எழுந்து சென்றதும், பின்பு தானும் தன்னுடைய காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். ஆனால் இந்த விபத்து குறித்து இதுவரை கால்பாடி காவல் நிலையத்தில் யாரும் புகார் அளிக்கவில்லை.

Also see... தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் - வானிலை மையம்

முதியவர் மீது கார் மோதிய விபத்தில் எந்த காயமும் ஏற்படாமல் அவர்  உயிர் பிழைத்து எழுந்து சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் - செல்வம், வேலூர்

First published:

Tags: Katpadi, Road accident, Vellore