வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் ஒரிரு நாட்களுக்கு முன் ஆய்வு செய்தார். அப்போது ஒரு அரசு பள்ளியின் முன்பு இருந்த கடையில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களான பான்பராக், குட்கா போன்றவை இருப்பதை கண்டுபிடித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வேலூர் மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். வேலூர், குடியாத்தம், பேர்ணாம்பட்டு போன்ற அரசு மருத்துவமனைகளில் 300 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 737 பேருக்கு கொரோனா பாதிப்பு
மேலும் மாணவர்களுக்கு தலை முடியை சீராக வெட்டாத சலூன் கடை காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், கடைகளுக்கு சீல் வைக்கப்படும். ஏற்கனவே வேறு விதமாக முடிவெட்டிக் கொண்டவர்களுக்கு இலவசமாக முடியை திருத்தி வெட்டவேண்டும் என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியனின் அறிவிப்பு முடி திருத்தும் தொழிலாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஆட்சியர் அறிவித்திருந்த இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இல்லையென்றால் நாங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.
உங்கள் நகரத்திலிருந்து(Vellore)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.