ஹோம் /நியூஸ் /Vellore /

மாணவர்களுக்கு தலை முடியை சீராக வெட்டாத சலூன் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.. வேலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

மாணவர்களுக்கு தலை முடியை சீராக வெட்டாத சலூன் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.. வேலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

மாணவர்களுக்கு சீராக முடி வெட்டாத கடைகளுக்கு சீல்.. ஆட்சியர் எச்சரிக்கை

மாணவர்களுக்கு சீராக முடி வெட்டாத கடைகளுக்கு சீல்.. ஆட்சியர் எச்சரிக்கை

ஏற்கனவே வேறு விதமாக முடிவெட்டிக் கொண்டவர்களுக்கு இலவசமாக முடியை திருத்தி வெட்டவேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மாணவர்களுக்கு தலை முடியை சீராக வெட்டாத சலூன் கடை காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும்,  வேலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் ஆய்வு செய்தார். அப்போது ஒரு அரசு பள்ளியின் முன்பு இருந்த கடையில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களான பான்பராக், குட்கா போன்றவை இருப்பதை கண்டுபிடித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, கொரோனா பரவல் அதிகம் துவங்கியுள்ளதால் சில கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்தில் முகக்கவசம் அனைவரும் அணிய வேண்டுமென கட்டாயமாக்கப்படுகிறது.

மேலும் இன்றைய தினம் 11 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் வேலூர், குடியாத்தம், பேர்ணாம்பட்டு போன்ற அரசு மருத்துவமனைகளில் 300 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மக்கள் அதிகம் கூடும் நேதாஜி மார்கெட் வாரசந்தை பேருந்து நிலையம் போன்றவற்றில் கட்டாயம் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும், இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், பெரிய வணிக வளாகங்களில் ஏசி-க்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனை கடைபிடிக்க உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

திருமண மண்டபங்களில் அதிக அளவு மக்கள் கூடுவதை தடுக்க வேண்டும், கிருமி நாசினியை ஒவ்வொரு வணிக வளாகங்களிலும் வைக்க வேண்டும், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், அத்துடன் பள்ளிக்கு வரும் மாணவர்கள் ஒழுக்கங்களை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சீருடை மற்றும் சிகை அலங்காரம் ஆகியவைகள் மாணவர்கள் ஒரே மாதிரியாக வரவேண்டும். அதற்காக சலூன் கடைகாரர்கள் மற்றும் தையல்காரர்களை அழைத்து அறிவுறுத்தியுள்ளோம். மாணவர்கள் கட்டாயம் இதனை கடைபிடிக்க வேண்டும்.

மாணவர்களுக்கு தலை முடியை சீராக வெட்டாத சலூன் கடை காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், கடைகளுக்கு சீல் வைக்கப்படும். ஏற்கனவே வேறு விதமாக முடிவெட்டிக் கொண்டவர்களுக்கு இலவசமாக முடியை திருத்தி வெட்டவேண்டும்.

அரசு வழங்கும் சீருடைகளை மாற்றி முழங்கால் தெரியும் வரை தைத்துக் கொடுக்கும் டைலர் கடை கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும், நாளை மறுதினம் முதல் பள்ளி மாணவர்களுக்கு பெற்றோர்களின் ஒப்புதலோடு கொரோனா தடுப்பூசி செலுத்தபடும் என்று கூறினார்.

Published by:Esakki Raja
First published:

Tags: Vellore