ஹோம் /நியூஸ் /வேலூர் /

ராணிப்பேட்டையில் தனியார் வங்கியில் தீ விபத்து...

ராணிப்பேட்டையில் தனியார் வங்கியில் தீ விபத்து...

எச் டி எஃப் சி

எச் டி எஃப் சி

Ranipettai | ராணிப்பேட்டையில் தனியார் வங்கி கட்டிடத்தின் மீது ஜெனரேட்டர் தொழில்நுட்ப கோளாறு காரணத்தால்  தீ விபத்து ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ranipettai (Ranipet), India

    ராணிப்பேட்டை மாவட்டம் காரை கூட்ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் ஹெச்டிஎஃப்சி வங்கியின் மேல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர் திடீரென தீப்பற்றி எறிய தொடங்கியது. இதனை கண்ட வங்கி காவலாளி மற்றும் ஊழியர்கள் உடனடியாக ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதனை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில்  ஈடுபட்டனர். வங்கியின் மாடி தளத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Also see... கஜோலின் சலாம் வெங்கி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

    மேலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை தொடர்ந்து ஜெனரேட்டர் ஆன் செய்த பத்து நிமிடத்தில் ஜெனரேட்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டிருப்பதாக தீயணைப்புத் துறையினர் முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் தீ விபத்து குறித்து  ராணிபோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    செய்தியாளர்: க.சிவா, ராணிப்பேட்டை 

    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Ranipettai, Vellore