ஹோம் /நியூஸ் /வேலூர் /

வேலூர் சி.எம்.சி ராகிங் விவகாரம் : மேலும் 3 மாணவர்கள் சஸ்பெண்ட்

வேலூர் சி.எம்.சி ராகிங் விவகாரம் : மேலும் 3 மாணவர்கள் சஸ்பெண்ட்

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

ராகிங்கை தடுக்க கல்லூரியில் 24 மணி நேர பாதுகாப்பும், கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்ற கல்லூரி அறிக்கையை ஏற்று வழக்கை முடித்து வைத்தது நீதிமன்றம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

வேலூர் சி.எம்.சி மருத்துவ கல்லூரியில் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்த விவகாரத்தில் மேலும் 3 மாணவர்களை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் குற்றச்சாட்டு முழுமையாக நிரூபிக்கப்பட்டால் மாணவர்கள் கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் எனவும் சி.எம்.சி உறுதியளித்துள்ளது.

முதலாமாண்டு மாணவர்களை சீனியர் மாணவர்கள் அரை நிர்வாணமாக்கி துன்புறுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து, கல்லூரி நிர்வாகம் 7 மாணவர்களை இடைநீக்கம் செய்தது. தற்போது, 3 மாணவர்களை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, கல்லூரி நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை மூலம் தெரிவித்திருந்தது.

இதையும் படிக்க : ஆபாசமாக பேசிய வழக்கு : நடிகைகளிடம் மன்னிப்பு கேட்ட திமுக பேச்சாளர்!

இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ராகிங்கை தடுக்க கல்லூரியில் 24 மணி நேர பாதுகாப்பும், கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும், தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்ற கல்லூரி அறிக்கையை ஏற்று தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்தது.

மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் கவனிக்க கல்லூரி நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

First published:

Tags: Madras High court, Vellore, Vellore Hospital