ஹோம் /நியூஸ் /திருச்சி /

திருச்சியில் அரசு பேருந்தில் ஆபத்தாக பயணித்த இளைஞர்கள்... பின்னால் காரில் வந்தவர் என்ன செய்தார் தெரியுமா?

திருச்சியில் அரசு பேருந்தில் ஆபத்தாக பயணித்த இளைஞர்கள்... பின்னால் காரில் வந்தவர் என்ன செய்தார் தெரியுமா?

அரசு பேருந்தில் ஆபத்தாக பயணித்த இளைஞர்கள்

அரசு பேருந்தில் ஆபத்தாக பயணித்த இளைஞர்கள்

Trichy District News | அரசு பேருந்தில் இளைஞர்கள் இருவர் பின்னால் தொங்கியபடி ஆபத்தான முறையில், கால்களை தொங்கவிட்டு தரையில் உரசி சாகச பயணம் மேற்கொண்டனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tiruchirappalli, India

  திருச்சியில் பேருந்துகளின் பின்புறம் ஆபத்தான முறையில் சாகச பயணம் மேற்கொள்ளும் இளைஞர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

  சாகசம் செய்கிறோம் என இளைஞர்கள் பலர் ரயில் படிக்கட்டுகளில் தொங்கியவாரும், ரயில் நிலையங்களில், ரயில் செல்லும்போது நடைமேடைகளில் கால்களை உரசியவாறு இறங்கி ஏறுவதும், போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலைகளில், இருசக்கர வாகனங்களில் ஆபத்தான முறையில் நெருப்பை பறக்கவிட்டு சாகசம் செய்வதும், வாடிக்கையாகி வருகிறது.

  இந்நிலையில், இதன் தொடர்ச்சியாக திருச்சியில் தற்போது இளைஞர்கள் சிலர் பேருந்துகளின் பின்புறம் ஆபத்தான முறையில் சாகச பயணங்கள் மேற்கொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து, மார்க்கெட், காட்டூர், திருவெறும்பூர் வழியாக சூரியூர் செல்லும் அரசு பேருந்தில் இளைஞர்கள் இருவர் பின்னால் தொங்கியபடி ஆபத்தான முறையில், கால்களை தொங்கவிட்டு தரையில் உரசி சாகச பயணம் மேற்கொண்டனர்.

  இதையும் படிங்க : 78% பள்ளிகளில் 100-க்கும் குறைவான மாணவர்கள் - சிறப்பு திட்டங்களை வலியுறுத்தும் பாமக நிறுவனம் ராமதாஸ்!

  இந்த காட்சிகளை, பின்னால் காரில் பயணித்த ஒருவர் ஒளிப்பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதேபோன்று, திருச்சி பழங்கனாங்குடியில் இருந்து துப்பாக்கி தொழிற்சாலை, திருவெறும்பூர் வழியாக, திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் செல்லக்கூடிய தனியார் பேருந்தின் பின்புறமும் இளைஞர்கள் இருவர் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்யும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  இதுபோல், உயிரை துச்சமாக நினைத்து, ஆபத்தான முறையில்,  சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

  செய்தியாளர் : கோவிந்தராஜ் - திருச்சி

  Published by:Karthi K
  First published:

  Tags: Trichy