ஹோம் /நியூஸ் /திருச்சி /

குடும்ப முன்விரோதத்தில் வாலிபர் வெட்டிக்கொலை.. திருச்சியில் அதிர்ச்சி!

குடும்ப முன்விரோதத்தில் வாலிபர் வெட்டிக்கொலை.. திருச்சியில் அதிர்ச்சி!

கொலை செய்யப்பட்ட வாலிபர்

கொலை செய்யப்பட்ட வாலிபர்

Trichy Murder News : திருச்சி அருகே குடும்ப முன் விரோதத்தில் வாலிபரை அரிவாளால் வெட்டி கொலை செய்து பழிக்கு பழி வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருகே கொள்ளிடம் கிளிக்கூடு கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ்(23). இவர் கடந்த 2020ம் ஆண்டு தனது ஆதரவாளர்கள் மதியழகன், ஆனந்த் ஆகியோருடன் அதே பகுதியை சேர்ந்த அறிவழகன் என்பவரை முன் விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்துள்ளனர்.

இதனால் பிரகாஷ் குடும்பத்தினருக்கும், அறிவழகன் குடும்பத்தினருக்கும் இடையே பகை அதிகரித்து முன் விரோதம் தொடர்ந்துள்ளது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்த பிரகாஷை, கொலையுண்ட அறிவழகனின் பெரியப்பா மகன் அசோக் மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேரும் சேர்ந்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.

இதில் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் விரைந்து சென்று பிரகாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க : 'நானேதான் முன்னுதாரணம்'.. ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை பெற்றெடுத்த அரசு மருத்துவர்!

மேலும் இந்த சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

குடும்ப முன் விரோதத்தில் அரங்கேறிய இந்த பழிக்கு பழி கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் : கோவிந்தராஜ் - திருச்சி

First published:

Tags: Crime News, Local News, Trichy