Home /News /trichy /

திருச்சியில் 6 கிராமங்கள் எங்களுக்கு சொந்தம்... வக்பு வாரியம் அறிவிப்பால் மக்கள் பாதிப்பு

திருச்சியில் 6 கிராமங்கள் எங்களுக்கு சொந்தம்... வக்பு வாரியம் அறிவிப்பால் மக்கள் பாதிப்பு

வக்பு வாரியம் அறிவிப்பு

வக்பு வாரியம் அறிவிப்பு

ராணி மங்கம்மாள் உட்பட மன்னர்கள், வக்பு வாரியத்திற்கு இனாமாக கிராமங்களை வழங்கியுள்ளதாகவும், இதனால் 'இனாம் கிராமம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக வக்பு வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Tamil Nadu
திருச்சி மாவட்டத்தில் 6 கிராமங்களை, வக்பு வாரியம் தங்களுக்கு சொந்தமானது என குறிப்பிடப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் சொத்துக்களை வாங்கவோ விற்கவோ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் வக்பு வாரியம் சார்பில், அதன் தலைமை நிர்வாக அலுவலர் ரபியுல்லா கடந்த மாதம் 18ம் தேதி ஒரு கடிதம் எழுதினார். அதில் வக்பு வாரியத்திற்கு சொந்தமான நிலங்கள் மற்றும் சொத்துகளின் விவரங்களை பட்டியலிட்டு, அந்த சொத்துக்களை வாங்கவோ விற்கவோ அனுமதிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். திருச்சி மாவட்டத்தில் உள்ள, 12 துணை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு இந்த கடிதம் வந்துள்ளது.

ALSO READ | திமுக அமைச்சருக்கு எதிராக வந்த தீர்ப்பை திசை திருப்பவே லஞ்ச ஒழிப்பு சோதனை - இபிஎஸ் கண்டனம்!
 திருவெறும்பூர் சார்-பதிவாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட கும்பக்குடி, அரசகுடி, கே.சாத்தனூர் துணைப்பதிவாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட சூரியூர், குண்டூர் மற்றும் திருச்சி இணைப் பதிவாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட திருச்செந்துறை ஆகிய கிராமங்கள் வக்பு வாரியத்தின் சொத்துகளாக குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இதனால், திருச்சி மாவட்டத்தில், 6 கிராமங்களில் வசிக்கும் மக்கள், சொத்துக்கள் வாங்கவோ, விற்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


இந்த நிலையில், இது குறித்து நமது திருச்சி மண்டல தலைமைச் செய்தியாளர் விஜயகோபாலுக்கு, வக்பு வாரிய தலைமை செயல் அலுவலர் ரபியுல்லா தொலைபேசி வாயிலாக விளக்கமளித்துள்ளார். அதில், ராணி மங்கம்மாள் உட்பட மன்னர்கள், வக்பு வாரியத்திற்கு இனாமாக கிராமங்களை வழங்கியுள்ளதாகவும், இதனால் 'இனாம் கிராமம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், சம்பந்தப்பட்ட கிராம மக்கள் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி தங்களுக்குரிய நிவாரணத்தை தேடிக் கொள்ளலாம் என்றும் ரபியுல்லா விளக்கமளித்தார்.
Published by:Anupriyam K
First published:

Tags: Trichy

அடுத்த செய்தி