Home /News /trichy /

திமுக மலை, பாஜக மடுவு... இது தமிழ்நாட்டின் பொற்காலம் - வைகோ

திமுக மலை, பாஜக மடுவு... இது தமிழ்நாட்டின் பொற்காலம் - வைகோ

வைகோ

வைகோ

Trichy : தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மிகச் சிறந்த ஆட்சி நடைபெற்று வருகிறது - வைகோ

திமுகவின் ஓராண்டு ஆட்சிக்காலத்திற்கும், பாஜகவின் 8 ஆண்டு ஆட்சி காலத்திற்கும் உள்ள வேறுபாடு மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்  என  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட மதிமுக செயலாளராக இருந்த சேதுமாதவன் மறைவை தொடர்ந்து, அவரது திருவுருவப் பட திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சி விமான நிலையம் வந்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து திருச்சி வந்த அவருக்கு, மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, சேரன், மாநில நிர்வாகிகள் டாக்டர் ரொஹையா, மணவை தமிழ் மாணிக்கம், கவுன்சிலர் அப்பீஸ் முத்துக்குமார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதைத் தொடர்ந்து, வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “மதிமுகவினர் கொள்கை உறுதியோடு இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் கட்சியில் இணைந்திருப்பவர்கள் கொள்கை உணர்வோடு இருப்பவர்கள் என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் இருப்பதாகவே தெரியவில்லை. மக்களின் பேராதரவோடு கருணாநிதி வகுத்து தந்த பாதையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மிக சிறந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலக்கட்டம் தான் தமிழ்நாட்டின் பொற்காலம் என்று பாராட்டினார்.

Must Read : சிதம்பரம் நடராஜர் கோவிலில் அறநிலையத்துறை குழு ஆய்வு செய்ய தீட்சிதர்கள் எதிர்ப்பு

மேலும், திராவிடக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் எவ்வித சமரசமும் இன்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், திமுகவும் உறுதியோடு இருக்கின்றனர் என்று கூறிய வைகோ, திமுகவின் ஓராண்டு ஆட்சிக்காலத்திற்கும் பாஜகவின் 8 ஆண்டு ஆட்சிக் காலத்திற்கும் மலைக்கும் மடுவுக்கான வித்தியாசம் உள்ளது. திமுக ஆட்சி மலை என்றால், பாஜக ஆட்சி மடுவு என்று கூறினார்.
Published by:Suresh V
First published:

Tags: BJP, DMK, MDMK, MK Stalin, Trichy, Vaiko

அடுத்த செய்தி