திருச்சி அருகே யுவன் சங்கர் ராஜா பாட்டு கச்சேரியில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகனை தாக்கி 10 பவுன்சர்கள் மீது திருவெறும்பூர் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருச்சி அருகே உள்ள மொராய் சிட்டி இந்த பகுதியில் அடிக்கடி திரைப்பட நட்சத்திரங்களைக் கொண்டு பாட்டு கச்சேரி நடத்தப்படுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக கடந்த 10-ம் தேதி யுவன் சங்கர் ராஜா பாட்டு கச்சேரி நடந்தது. இந்த கச்சேரியில் திருச்சி புத்தூர் ராமலிங்க நகர் 1வது தெருவை சேர்ந்தவர்கள் முகமது ஹாசிம், அஜீம் தம்பதி. இவர்களது மகன் முகமது ஹரிஷ் (20)இவர் வல்லம் பகுதியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பிடெக் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். அஜீம் திருச்சி மாவட்ட குற்ற காப்பகத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் முகமது ஹரிஷ் தனது உறவினருடன் யுவன் சங்கர் ராஜா பாட்டு கச்சேரிக்கு பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது பாட்டு கச்சேரியில் பவுன்சர்களாக இருந்தவர்கள் அங்குள்ள பார்வையாளர்களிடம் தகராறு செய்ததோடு பலரை தாக்கியுள்ளனர். அதில் முகமது ஹரிஷ் உறவினர்களை பவுன்சர்கள் தாக்கியுள்ளனர். இதைக் கேட்டதற்கு முகமது ஹரீசை பிளாஸ்டிக் சேர், இரும்பு கம்பி, கம்பு, கை ஆகியவற்றால் பலமாக பவுன்சர்கள் தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த முகமது ஹரிஷை அருகில் உள்ளவர்கள் காப்பாற்றி திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து முகமது ஹரீஷ் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் யுவன் சங்கர் ராஜா பாட்டு கச்சேரியில் இருந்த 10 பவுன்சர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்: கோவிந்தராஜ்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Trichy, Yuvan Shankar raja