ஹோம் /நியூஸ் /திருச்சி /

திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர் சிலையச் சுற்றி இருசக்கர வாகனத்தில் வட்டமடித்து இளைஞர்கள் கொண்டாட்டம்..

திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர் சிலையச் சுற்றி இருசக்கர வாகனத்தில் வட்டமடித்து இளைஞர்கள் கொண்டாட்டம்..

திருச்சி - பெரும்பிடுகு முத்தரையர் சிலை

திருச்சி - பெரும்பிடுகு முத்தரையர் சிலை

Tiruchirappalli | திருச்சியில் காவல்துறையினர் முன்பே இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் அட்ராசிட்டி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tiruchirappalli, India

  திருச்சி கண்டோன்மெண்ட் ஒத்தகடை பகுதியில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னரின் திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

  இரண்டாம் ஆண்டு அபிஷேக ஆராதனை பெருவிழாவை முன்னிட்டு உலக மக்கள் நலனை வேண்டி குடமுருட்டி காவிரி ஆற்றில் அய்யாளம்மன் படித்துறையில் இருந்து பால்குடம் மற்றும் தீர்த்த குடம் கொண்டுவரப்பட்டு  பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னருக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

  தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  மேலும் அங்கு வந்த இளைஞர்கள் காவல்துறையினர் முன்பே இருசக்கர வாகனங்களில் அட்ராசிட்டியில் ஈடுபட்டனர்.

  Also see... சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து 7 பேர் படுகாயம்

  30க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.  காவல்துறையினர் முன்பே இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் அட்ராசிட்டி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது.

  செய்தியாளர்:கோவிந்தராஜ், திருச்சி 

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Trichy