திருச்சி- சென்னை சாலைகளில் பைக் ரேஸ் மற்றும் பைக் சாகசத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினமும் இளைஞர்கள் சிலர் தாறுமாறான வேகத்தில் செல்வதுடன் தன்னுடன் மேலும் 2 இளைஞர்களை முன்னும் பின்னுமாக உட்கார வைத்துக்கொண்டு முன் வீலை தூக்கிக்கொண்டு ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டி வருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் உள்ள மற்றும் வாகனங்கள் அதிக அளவு செல்லும் பகுதியில் இந்த சாகசத்தில் ஈடுபடுகிறார். பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள் கடுமையாக அச்சமடைகின்றனர். மேலும் இந்த இளைஞர்கள் யாரும் தலைக்கவசம் கூட அணியாமல் ஆபாத்தான முறையில் செல்கின்றனர். தினசரி இதுபோல பைக் சாகசத்தில் ஈடுபட்டு வருவதால் இப்பகுதியில் மக்கள் நடமாடவே அஞ்சுகிறார்கள். இவர்கள் சாகசம் செய்யும் போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு விட்டால்
ஒன்றும் அறியாத அப்பாவி மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் திருச்சி மாநகரத்தை பொறுத்தவரை இதை யாரும் கண்டுகொள்வதில்லை. இதை இப்படியே விட்டு விட்டால் இன்னும் பலர் இப்படி கிளம்பி விடுவார்கள் என்பதால் பொது நலன் கருதி இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலாளர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
செய்தியாளர்: சே.கோவிந்தராஜ்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tamil News, Trichy