முகப்பு /செய்தி /திருச்சி / என்னது 123 வயசா.. ஆதார் அட்டை கோளாறால் அவதியுறும் 43 வயது திருச்சி பெண்..

என்னது 123 வயசா.. ஆதார் அட்டை கோளாறால் அவதியுறும் 43 வயது திருச்சி பெண்..

ஆதார் அட்டை கோளாறால் அவதி

ஆதார் அட்டை கோளாறால் அவதி

Adhar Card : திருச்சியை சேர்ந்த 41 வயது பெண்ணிற்கு 123 வயது என்று ஆதாரில் தவறுதலாக இடம்பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம் தாயனூர் தெற்கு தெருவை  சேர்ந்தவர் கவிதா(41). இவர் கடந்த 1982ம் ஆண்டு பிறந்துள்ளார். ஆனால், ஆதார் அட்டை எடுக்கும்போது, கவிதாவின் பிறந்த ஆண்டை 1982ம் ஆண்டு என்பதற்கு பதிலாக 1900 என்று அச்சிட்டு வழங்கியுள்ளனர். இதனால் 41 வயது பெண்ணுக்கு, 123 வயதானதைபோல இருப்பதால், அரசின் எந்த சலுகைகளையும் பெற முடியாத நிலையில் உள்ளார்.

மேலும், அரசின் திட்டங்களுக்கும் ஆதார் கார்டு மட்டுமே பிரதானமாக இருப்பதால், இவருடைய ஆதார் அட்டையை அரசு அலுவலகங்களில் நிராகரிக்கின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக பலமுறை ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டை திருத்தம் செய்ய கவிதா முயற்சி செய்துள்ளார். ஆனால் பிறப்புச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ் இல்லை என கூறி ஆதாரில் பிறந்த ஆண்டை மாற்றி தரமறுக்கின்றனர். வாக்காளர் அடையாள அட்டை மட்டுமே கவிதா வைத்துள்ள நிலையில், அதனை வைத்து பிறந்த ஆண்டை மாற்ற முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கவிதா தன்னுடைய ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டையை மாற்றித் தர வேண்டும். இல்லையென்றால் தனக்கு முதியோர் உதவித் தொகையாவது வழங்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அதிரடியாக மனு அளித்தார்.

செய்தியாளர் : விஜயகோபால் - திருச்சி

First published:

Tags: Aadhar, Local News, Trichy