Home /News /trichy /

கிராமங்களை சொந்தம் கொண்டாடும் வக்பு வாரியம் - போராட்டம் நடத்தவுள்ள மக்கள்.. சமாதான பேச்சுக்கு அழைப்பு..!

கிராமங்களை சொந்தம் கொண்டாடும் வக்பு வாரியம் - போராட்டம் நடத்தவுள்ள மக்கள்.. சமாதான பேச்சுக்கு அழைப்பு..!

வக்பு வாரியம்

வக்பு வாரியம்

திருச்செந்துறை கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து நாளை காத்திருப்பு போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Tiruchirappalli
திருச்சி அருகே 6 கிராமங்கள் தங்களுக்கு சொந்தமானது என வக்பு வாரியம் கூறியதால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்ததையடுத்து, வருவாய் கோட்டாட்சியர் சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே திருச்செந்துறை கிராமம் முழுவதும் வக்பு வாரியத்திற்கு சொந்தம் என்று சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் சொத்துகளை வாங்கவோ, விற்கவோ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதுகுறித்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் நேற்று பிரத்தியேக செய்தி வெளியானது. அதையடுத்து, திருச்செந்துறை கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நாளை காத்திருப்பு போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.

ALSO READ | திருச்சியில் 6 கிராமங்கள் எங்களுக்கு சொந்தம்... வக்பு வாரியம் அறிவிப்பால் மக்கள் பாதிப்பு

இந்நிலையில், இன்று பிற்பகல், 3 மணியளவில் ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன் தலைமையில், திருச்செந்துறை கிராம மக்கள் மற்றும் வக்பு வாரிய அதிகாரிகளுக்கு சமாதான பேச்சு வார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Published by:Anupriyam K
First published:

Tags: Trichy

அடுத்த செய்தி