கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட ராச்சாண்டார் திருமலை, ஊர்பாறைப்பட்டி, அழகாபுரி, காமகவுண்டம்பட்டி, ஆலத்தூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாட்டு வண்டிகளில் வந்து, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்வது வழக்கம்.
அதன்படி, நடப்பாண்டு, 33 மாட்டு வண்டிகளில் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீரங்கம் கோயிலுக்கு கிளம்பினர். புறப்படுவதற்கு முன் வடச்சேரி கிராமத்தில் உள்ள கருப்பசாமி கோயிலில் சகுணம் பார்த்தனர்.பின்னர் அவர்கள் ஒருநாள் தங்குவதற்கு தேவையான உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் எடுத்துக்கொண்டு பாறைப்பட்டிக்கு வந்தனர்.
பின்னர் அங்கிருந்து இரவு, 11 மணிக்கு, 33 மாட்டுவண்டிகளில் புறப்பட்டு, திருச்சி தாயனூர், அல்லித்துறை, சோமரசம்பேட்டை, புத்தூர் நால்ரோடு, கரூர் பைபாஸ் சாலை, காவிரிப் பாலம், அம்மாமண்டபம் சாலை, ஸ்ரீரங்கம் ராகவேந்திரா ஆர்ச் வழியாக நேற்று காலை, 9 மணியளவில், ஸ்ரீரங்கம் மேலூரில் உள்ள தென்னந்தோப்பிற்கு வந்தனர்.
இதில், குழந்தைகள், பெண்கள் உள்பட சுமார், 300 பேர் இருந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் ரங்கநாதர் கோயிலில் பெருமாளைச் சேவித்தனர். தொடர்ந்து இன்று இவர்கள் கொள்ளிடம் ஆற்றிற்கு சென்று குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு முடிகாணிக்கை செலுத்துவர்.
Also Read: கலைஞரின் நீண்ட நாள் கனவுகளை முதல்வர் நிறைவேற்றுவார்.. இளையராஜா புகழாரம்!
பின்னர் அங்கிருந்து வடக்குவாசல் வழியாக கோயிலுக்கு சென்று ஏற்கனவே நேர்த்திக் கடனாக சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தி விட்டு குழந்தைகளுக்கு காதுகுத்திவிட்டு மீண்டும் சாமி தரிசனம் செய்வர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதன் பிறகு அன்னதானம் வழங்கி விட்டு இரவு மாட்டு வண்டிகளில் வந்த வழியே ஊர் திரும்ப இருக்கிறார்கள். திருச்சி மாநகரத்தின் ஊடாகச் சென்ற இந்த மாட்டு வண்டிகள் ஊர்வலம், மாநகர மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Srirangam, Tamil News, Tamilnadu, Trichy