ஹோம் /நியூஸ் /திருச்சி /

தீபாவளி பரிசுகள் குவிப்பு? - திருச்சியில் போக்குவரத்து துணை ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

தீபாவளி பரிசுகள் குவிப்பு? - திருச்சியில் போக்குவரத்து துணை ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

துணை போக்குவரத்து ஆணையர் அழகரசு

துணை போக்குவரத்து ஆணையர் அழகரசு

திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி துணை போக்குவரத்து ஆணையராக பணிபுரிந்து வருபவர் அழகரசு (வயது 56). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக, திருச்சி, பிராட்டியூர் ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் துணை போக்குவரத்து ஆணையராக பணி புரிந்து வருகிறார். திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களும், திருச்சியில் பிராட்டியூர், ஸ்ரீரங்கம், சஞ்சீவி நகர் உட்பட, 8 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், மற்றும், 14 பகுதி மோட்டார் வாகன அலுவலகங்களும் இவரது கட்டுப்பாட்டில் உள்ளன.

இவர், கடந்துச் சென்ற தீபாவளி பண்டிகையொட்டி, பல்வேறு நபர்களிடமிருந்து பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்ட அன்பளிப்புகளை ஏராளமாக வாங்கிக் குவித்ததாக புகார்கள் எழுந்தன. மேலும் இவர் திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலராக பணியாற்றியபோது, வருமானத்திற்கு அதிகமாக சுமார், 2 கோடிக்கும் மேல் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையால் இவர் மீது வழக்கும் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

Also Read: கோவை கார் வெடிப்பு: 6வது நபர் கைதில் பரபரப்பு திருப்பம்!

இந்நிலையில், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே வில்லியம்ஸ் சாலையில், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அழகரசு வீட்டில், திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை, 6 மணிக்கு துவங்கிய சோதனையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சோதனையின் முடிவில், எவ்வளவு பணம், நகை, ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்பது குறித்து  தெரியவரும்.

Published by:Ramprasath H
First published:

Tags: Crime News, Directorate of Vigilance and Anti-Corruption, Income Tax raid, Trichy