Home /News /trichy /

திருச்சி மேம்பாலத்தில் கார் - லாரி மோதி கோர விபத்து.. ஒருவர் உயிரிழப்பு.. பெங்களூரு தம்பதி படுகாயம்

திருச்சி மேம்பாலத்தில் கார் - லாரி மோதி கோர விபத்து.. ஒருவர் உயிரிழப்பு.. பெங்களூரு தம்பதி படுகாயம்

திருச்சி சாலை விபத்து

திருச்சி சாலை விபத்து

Tiruchirappalli | விபத்து நடந்த பாலம் குறுகிய பாலம் என்பதுடன் வளைவுகள் நிறைந்ததாகவும் இருக்கிறது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் டிரைவருக்கு தெரியாத காரணத்தால், இந்த பாலத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
கர்நாடக மாநிலம் பெங்களூர் ஜே.பி நகரை சேர்ந்தவர் பிரசன்னா (31). ஐடி நிறுவன ஊழியர். இவரது மனைவி அனுராதா (29). இவர்களது மகன் சாய்பிரணவ் (6). இவர்கள் அனைவரும் நேற்று இன்னோவா வாடகை காரில் பெங்களூருவில் இருந்து புறப்பட்டு கடலூரில் உள்ள தங்களது உறவினர் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தனர். காரை, கிருஷ்ணகிரி மாவட்டம்  கூட்டுறவு காலனியை சேர்ந்த ஷேக் ஜூலான் பாஷா (28) என்பவர் ஓட்டினார்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள உத்தமர்கோவில் ரயில்வே மேம்பாலத்தில்  இன்று காலை கார் வந்தபோது, எதிரே வந்த, சிமெண்ட் ஏற்றி வந்த ர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில், கார் டிரைவர் ஷேக் ஜூலான் பாஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் பயணித்த பிரசன்னா மற்றும் அவரது குடும்பத்தினர், 3 பேரும் படுகாயம் அடைந்து, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்தினால், திருச்சி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன.

தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்து சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த பாலம் குறுகியஎன்பதுடன் வளைவுகள் நிறைந்ததாகவும் இருக்கிறது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் டிரைவருக்கு தெரியாத காரணத்தால், இந்த பாலத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

Also see... ரயில் தண்டவாளத்தில் ஐஐடி மாணவி சடலமாக மீட்பு

எனவே, வருங்காலத்தில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு விபத்துகளை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 
Published by:Vaijayanthi S
First published:

Tags: Crime News, Railway police, Road accident, Trichy

அடுத்த செய்தி