முகப்பு /செய்தி /திருச்சி / ஓடும் ரயிலில் டிக்கெட் பரிசோதகர் மீது தாக்குதல்... தலைமைச் செயலக ஊழியர் கைது..!

ஓடும் ரயிலில் டிக்கெட் பரிசோதகர் மீது தாக்குதல்... தலைமைச் செயலக ஊழியர் கைது..!

தாக்கப்பட்ட டிக்கெட் பரிசோதகர்

தாக்கப்பட்ட டிக்கெட் பரிசோதகர்

Trichy TTR attack | திருச்சியில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த டிக்கெட் பரிசோதகரை குடிபோதையில் இருந்த பயணி ஒருவர் சரமாரியாக தாக்கியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சியில் உள்ள கல்லுக்குழி ரயில்வே குடியிருப்பில் வசித்து வருபவர் அரபிந்த்குமார் (35). பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர், திருச்சி ரயில்வே மண்டலத்தில் பயணச்சீட்டு பரிசோதராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு ராமேஸ்வரத்திலிருந்து சென்னை நோக்கி செல்லும் 'சேது' அதி விரைவு ரயிலில், திருச்சியில் இருந்து அதிகாலை 1.30 மணியளவில் அரபிந்த்குமார் பணியில் இணைந்துள்ளார்.

இதையும் படிங்க; துண்டு துண்டாக வெட்டப்பட்ட மனைவியின் உடல்.. தண்ணீர்தொட்டியில் வீசிய கொடூர கணவன் - சிக்கியது எப்படி?

அந்த ரயில் விருத்தாச்சலம் அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென டிக்கெட் பரிசோதகருக்கும், கிருஷ்ணமூர்த்தி என்ற பயணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த பயணி சென்னையில் உள்ள தமிழ்நாட்டின் தலைமைச் செயலகத்தில் அலுவலக உதவி பிரிவு அலுவலராக பணியாற்றி வருகிறார்.

கிருஷ்ணமூர்த்தி ராமேஸ்வரத்தில் வழிபாட்டை முடித்துவிட்டு ரயிலில் பணிக்கு திரும்பி கொண்டிருந்த போது பரிசோதகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட டிக்கெட் பரிசோதகர் அரபிந்த் குமார், தன்னை பயணி ஒருவர் குடிபோதையில் தாக்கிவிட்டதாக விழுப்புரத்தில் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இருவரையும் விழுப்புரத்தில் இருந்து ரயில்வே பாதுகாப்பு படை படையினர் திருச்சிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் திருச்சி ரயில் நிலையத்தில் எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய தமிழ்நாடு அரசு ஊழியருக்கு எதிராக  நடவடிக்கை எடுக்கக் கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே, ரயிலில் சென்றபோது, தான் பிகாரைச் சேர்ந்தவர் என்பதால், தன்னை கிருஷ்ணமூர்த்தி தாக்கியதாக திருச்சியில் செய்தியாளர்களிடம் டிக்கெட் பரிசோதகர் அரவிந்த் குமார் கூறியுள்ளார். பிரச்னையை திசை திருப்பும் வகையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அரவிந்த் குமார் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் மனீஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்: சே.கோவிந்தராஜ், திருச்சி.

First published:

Tags: Local News, Train, Train ticket, Trichy