ஹோம் /நியூஸ் /திருச்சி /

சென்சார் கதவை உடைத்து கொள்ளை.. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட பாணியில் அரங்கேறிய சம்பவம்..!

சென்சார் கதவை உடைத்து கொள்ளை.. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட பாணியில் அரங்கேறிய சம்பவம்..!

கொள்ளையடிக்கப்பட்ட வீடு

கொள்ளையடிக்கப்பட்ட வீடு

Trichy theft | கதவை உடைத்தவுடன் சென்சார் மூலம் வந்த தகவலையடுத்து தேவேந்திரன் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli | Thiruverumbur

திருச்சியில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட பாணியில் வீட்டின் சென்சார் கதவை உடைத்து 300 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் மலைக்கோயில் அருகே ஐஏஎஸ் நகரில் வசிப்பவர் தேவேந்திரன் (60). ஓய்வுப் பெற்ற பெல் நிறுவன ஊழியரான இவரும், இவரது தம்பி நேதாஜியும் தமிழகம் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் சாலைகள் போடுவது உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே கூட்டுக் குடும்பமாக வசித்து வரும் இவர்கள், நேதாஜியின் குடும்ப விழாவுக்காக வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டனர். இதற்கிடையே அவர்களது வீட்டின் முன்புற கதவை உடைத்த மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்தாக தெரிகிறது.

சென்சார் பொருத்தப்பட்ட கதவை உடைத்து விட்டு, வாசலின் முன்புறம் இருந்த சிசிடிவி கேமராவையும் மர்மநபர்கள் உடைத்துள்ளனர். கதவை உடைத்தவுடன் சென்சார் மூலம் வந்த தகவலையடுத்து தேவேந்திரன் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த, திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர், எஸ்பி சுஜித்குமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அதில், வீட்டில் இருந்த 300 சவரன் தங்க நகைகள், வைர நெக்லஸ், பணம் உள்ளிட்டவைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிஐஜி சரவணசுந்தர் கொள்ளையர்களை பிடிப்பதற்காக திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், பெல் இன்ஸ்பெக்டர் கமலவேணி, துவாக்குடி இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் ஆகியோர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், வீட்டை விட்டுவிட்டு வெளியூர் செல்லும் பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தால், அவர்கள் இரவு நேரத்தில் ரோந்து பணியில் கண்காணிப்பார்கள் எனவும் தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: விஜயகோபால், திருச்சி.

First published:

Tags: Crime News, Local News, Theft, Trichy