ஹோம் /நியூஸ் /திருச்சி /

'திருடன்.. திருடன்'.. அலறல் சத்தம் கேட்டு ஒன்றுகூடிய கூட்டம்.. வசமாக சிக்கிய செல்போன் திருடன்!

'திருடன்.. திருடன்'.. அலறல் சத்தம் கேட்டு ஒன்றுகூடிய கூட்டம்.. வசமாக சிக்கிய செல்போன் திருடன்!

செல்போனை பறித்த கொள்ளையன்

செல்போனை பறித்த கொள்ளையன்

சாலையில் ஓரமாக இருசக்கர வாகனத்தில் நின்ற படி பேசி கொண்டிருந்த இளைஞரிடம் இருந்து கொள்ளையன் செல்போனை பறித்து சென்றார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tiruchirappalli | Tiruchirappalli

  திருச்சியில் பட்டப்பகலில் செல்போனை பறித்து சென்ற கொள்ளையனை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

  திருச்சி கண்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்தவர் போஸ். இவர் திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவருக்கு திடீரென போன் வரவே, தனது இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு பேசிக் கொண்டிருந்தார்.

  அப்போது அவ்வழியே வந்த இளைஞர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில், போஸ் பேசிக் கொண்டிருந்த மொபைல் போனை பறித்துக் கொண்டு ஓடினார்.

  இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போஸ், சுதாரித்துக் கொண்டு, "திருடன்.. திருடன்... பிடியுங்கள்.." என்று கூக்குரல் எழுப்பியபடியே அவரை துரத்தினார்.

  இதையும் படிங்க | திருச்சியில் தடம் புரண்ட ரயில் பெட்டிகள்.. பாதியில் நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில்!

  அதைக்கேட்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் திருடனை மடக்கி பிடித்து, தர்மஅடி கொடுத்தனர். மேலும், மின்கம்பம் ஒன்றிலும் கட்டி வைத்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருடனை மீட்டு விசாரணை நடத்தியதில், அவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த விஜய்(20) என்பது தெரிய வந்தது.

  அவரிடம் இருந்து மொபைல் போனை பறிமுதல் செய்த போலீசார், விஜய் மீது வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  செய்தியாளர்: விஜயகோபால், திருச்சி.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Theft, Trichy