தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள்: உயர் நீதிமன்ற உத்தரவால் விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கும் TET தேர்ச்சியாளர்கள்
தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள்: உயர் நீதிமன்ற உத்தரவால் விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கும் TET தேர்ச்சியாளர்கள்
தற்காலிக ஆசிரியர் பணிக்காக குழந்தையுடன் அலையும் பெண்கள்
Trichy TET Exam Passed Students suffering | தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியாத சூழல் திருச்சி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 'டெட்' தேர்வில் தேர்ச்சிப் பெற்ற ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு, நேற்று (ஜூலை 4) முதல் இணையம் வழியாகவோ அல்லது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திலோ அல்லது மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்திலோ விண்ணப்பிக்கலாம்' என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதையடுத்து நேற்று முதல் திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் திருச்சி, லால்குடி, முசிறி உள்ளிட்ட மாவட்டக் கல்வி அலுவலங்களில் வேலைக்கு விண்ணப்பிக்க ஏராளமான ஆசிரியர்கள் குவிந்தனர்.
ஆனால், அங்குள்ள அலுவலர்கள் அவர்களது விண்ணப்பங்களை ஏற்கவில்லை. மாறாக, 'தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், இடைக்கால தடை விதிக்கப்பட்டு இருப்பதால், திருச்சி மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் சார்ந்த எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை' என்ற அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பை மட்டும் சுட்டிக்காட்டினர்.
இதனால் குழப்பம் அடைந்த ஆசிரியர்கள், கல்வித்துறை அலுவலர்களிடம் விசாரித்த போது, 'மதுரை கிளை நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை காரணமாக, தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்கான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை
மேலும், திருச்சியில் வரும் ஜூலை, 8ம் தேதி ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெறுவதால், அப்போது ஏற்படும் காலிப் பணியிடங்களையும் கணக்கில் கொண்டு, ஆசிரியர் பணி நியமனங்களை மேற்கொள்ள இருப்பதாக' தெரிவித்தனர்.
இதனால் ஆர்வமுடன் விண்ணப்பிக்க வந்த 'டெட்' (Teacher Eligibility Test) தேர்வு தேர்ச்சிப் பெற்ற ஆசிரியர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இவர்களில், மாற்றுத்திறனாளிகளும், கர்ப்பிணிப் பெண்களும், கைக்குழந்தைகளுடன் வந்த பெண்களும் அடக்கம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.