ஹோம் /நியூஸ் /திருச்சி /

ஆண்களுக்கு தலையில் தேங்காய் உடைப்பு... பெண்களுக்கு சாட்டை அடி... திருச்சி அருகே விநோதத் திருவிழா

ஆண்களுக்கு தலையில் தேங்காய் உடைப்பு... பெண்களுக்கு சாட்டை அடி... திருச்சி அருகே விநோதத் திருவிழா

விநோத திருவிழா

விநோத திருவிழா

முசிறி அருகே உள்ள அச்சப்பன், அகோர வீரபத்திரர் கோவிலில் ஆண்களுக்கு தலையில் தேங்காய் உடைத்தும் பெண்களை சாட்டையால் அடித்தும் விநோத திருவிழா நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம் முசிறி அருகே வெள்ளாளப் பட்டியில், அச்சப்பன், அகோர வீரபத்திரர் கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் விஜயதசமியன்று, கோயிலில் இருந்து உற்சவர் ஸ்வாமிகள் புறப்பாடாகி, பொதுமந்தையில் வைக்கப்படும்.

அங்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்வர். ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த மக்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்துவர். பில்லி, சூனியம், ஏவல், மனநிலை பாதிப்புள்ள பெண்கள், தங்களுக்கு இதுபோன்ற தீமைகள் நேரக் கூடாது என்று விரும்பும் பெண்கள்,  சாட்டையால் அடி வாங்கிக் கொள்வார்கள்.

விஜயதசமியான இன்று அச்சப்பன் மற்றும் அகோர வீரபத்திரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, அச்சப்பன் சுவாமி பரிவார தெய்வங்களுடன் காட்டுக் கோயிலில் எழுந்தருளினார்.

அங்கு கோயில் பூசாரிகள் சேர்வை அடித்து நடனம் ஆடினார்கள்.  அதன்பின், கோயிலில் முறை உடைய பக்தர்களின் தலைகளில் தேங்காய்கள் உடைக்கப்பட்டன.  அடுத்ததாக அங்குள்ள மைதானத்தில் நீண்ட வரிசையில் தலைவிரி கோலமாக மண்டியிட்டு கைகளை உயர்த்தியவாறு அமர்ந்திருந்த பெண்களின் மீது, கோயில் பூசாரி சரமாரியாக சாட்டையால் அடித்தார்.

இதையும் படிங்க: குணசீலத்தில் திருத்தேரோட்டம்... பக்தர்கள் விநோத வழிபாடு

'கோயில் பூசாரியிடம் சாட்டையால் அடி வாங்கினால், பேய் பிடித்திருந்தால் விலகிவிடும். குழந்தை வரம், திருமணத் தடை, தொழில் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு வளங்கள் கிடைத்திடும்' என்று  சாட்டையடி வாங்கிய பெண்கள் தெரிவித்தனர்.

Published by:Murugesh M
First published:

Tags: Festival, Temple, Trichy