முகப்பு /செய்தி /திருச்சி / திருச்சி சிறப்பு முகாமில் அதிரடி சோதனை.. புதைத்து வைக்கப்பட்டிருந்த 6 செல்போன்கள் பறிமுதல்..!

திருச்சி சிறப்பு முகாமில் அதிரடி சோதனை.. புதைத்து வைக்கப்பட்டிருந்த 6 செல்போன்கள் பறிமுதல்..!

திருச்சி அகதிகள் சிறப்பு முகாம்

திருச்சி அகதிகள் சிறப்பு முகாம்

Trichy Special Camp Police Raid | சிறப்பு முகாமில் மொபைல் போன் உள்ளிட்ட தடைச் செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சோதனை.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில், தமிழகத்தில் போலி பாஸ்போர்ட் உட்பட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறி, இலங்கைத் தமிழர்கள் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 140 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலைச் செய்யப்பட்ட முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரும் இந்த முகாமில் தான் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  சிறப்பு முகாமில் மொபைல் போன்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிறப்பு முகாமில் மொபைல் போன் உள்ளிட்ட தடைச் செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சிறப்பு முகாமில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, குப்பை கொட்டுகின்ற இடத்தின் அருகே புதைத்து வைக்கப்பட்டிருந்த, 6 மொபைல் போன்களை தோண்டி எடுத்தனர். இந்த போன்களை பயன்படுத்தியது யார்? என்பது குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

First published:

Tags: Crime News, Local News, Trichy