முகப்பு /செய்தி /திருச்சி / திமுக எம்.பி திருச்சி சிவா வீடு மீது தாக்குதல்... கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு..!

திமுக எம்.பி திருச்சி சிவா வீடு மீது தாக்குதல்... கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு..!

திருச்சி சிவாவின் கார் மற்றும் வீடு மீது தாக்குதல்

திருச்சி சிவாவின் கார் மற்றும் வீடு மீது தாக்குதல்

Trichy Siva MP House Attack | திருச்சி சிவா வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் வீட்டின் கண்ணாடிகளை உடைத்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

மாநிலங்களவை  உறுப்பினர்  திருச்சி சிவா வீடு  எஸ்.பி.ஐ காலணியில் அமைந்துள்ளது.  அப்பகுதியில் இறகு பந்து மைதானத்தை திறந்து வைப்பதற்காக அமைச்சர் கே.என்.நேரு இன்று காலை வருகை தந்தார்.   இதற்கான பெயர் பலகையில் எம்.பி  சிவாவின் பெயர் போடப்படவில்லை என அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர். அத்துடன், அமைச்சர் கே.என்.நேருவிற்கு எதிராக கருப்பு கொடியை காட்டினர்.

கருப்பு கொடி காட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி சிவா ஆதரவாளர்களுடன் அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில்  திருச்சி சிவா வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் வீட்டின் கண்ணாடிகளை உடைத்தனர்.

Also Read : ஏபிவிபி மாணவர்களை சிறையில் சந்தித்த விவகாரம்- டாக்டர் சுப்பையா வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து கருப்பு கொடிய காட்டியவர்கள் மற்றும் கண்ணாடியை உடைத்தவர்களை கண்டோன்மென்ட் போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

First published:

Tags: DMK, K.N.Nehru, Trichy Siva