Home /News /trichy /

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்... விழாக்கோலம் பூண்ட திருச்சி

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்... விழாக்கோலம் பூண்ட திருச்சி

சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Trichy Samyapuram Mariyamman Koil Temple Maha Kumbabisegam : உலகப் பிரசித்திப்பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில், ஏழு நிலைகளை கொண்ட ராஜகோபுர மஹா கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது. இதனால், திருச்சி விழாக்கோலம் பூண்டுள்ளது.

    திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் புதிய ராஜகோபுரம் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்று வருகிறது. முன்னதாக, இதற்காக ராஜகோபுரத்தின் உச்சியில் கும்ப கலசங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    நேற்று (செவ்வாய்க் கிழமை) விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனத்துடன் இரண்டாம் கால யாகச்சாலை பூஜையும், மாலை, 5.30 மணிக்கு மேல் இரவு, 8 மணிக்குள் விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், மூன்றாம் கால யாகச்சாலை பூஜையும் நடைபெறுகின்றன. விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகத்தையொட்டி, அதனைத் தொடர்ந்து, இன்று அதிகாலை, 4.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம் மற்றும் நான்காம் கால யாகச்சாலை பூஜை நடைபெற்றன.

    அதனைத் தொடர்ந்து, காலை, 6.45 மணிக்கு மேல் தொடங்கி 7.25 மணிக்குள், ராஜகோபுர மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, சமயபுரம் மாரியம்மன் கோயில் மின்னொளியில் ஜொலிக்கிறது.

    கும்பாபிஷேகத்தை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் திரண்டு வந்துள்ளனர். இதனால், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார் மேற்பார்வையில், எஸ்.பி. சுஜித்குமார் தலைமையில், 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



    மேலும், குற்ற சம்பவங்களைத் தடுக்கும் விதமாக, சமயபுரம் நால்ரோடு பகுதி முதல், கோயில் வரை கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கொரானா தொற்று ஏற்படா வண்ணம் தனியார் மற்றும் அரசு மருத்துவத்துமனைகள் சார்பில், ஆங்காங்கு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சமயபுரம் ராஜகோபுர கும்பாபிஷேகத்தையொட்டி திருச்சியே திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.

    Must Read :  இந்து சமய அறநிலையத்துறை வேலை... தற்காலிக பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு உள்ளட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Temple, Trichy

    அடுத்த செய்தி