ஹோம் /நியூஸ் /திருச்சி /

உறையூரில் துணிக்கடையில் திடீர் தீ விபத்து : ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்!

உறையூரில் துணிக்கடையில் திடீர் தீ விபத்து : ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்!

துணிக்கடையில் ஏற்பட்ட தீயினை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர்

துணிக்கடையில் ஏற்பட்ட தீயினை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர்

Trichy Readymate Shop Fire| முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

உறையூரில் துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

திருச்சி உறையூர் செட்டித் தெருவை சேர்ந்தவர்கள் ரபீக், அஜ்மல், ஜெயக்குமார். இவர்கள் கூட்டாக இணைந்து, திருச்சி தில்லைநகர் மக்கள்மன்ற வளாகத்தில், ரெடிமேட் துணிகள் கண்காட்சி மற்றும் விற்பனை நிலையத்தை நடத்தி வருகின்றனர். இவர்கள் நேற்றிரவு வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.

நள்ளிரவில் கடையில் திடீரென  தீ கொழுந்துவிட்டு எரியத் துவங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த,  மூன்று தீயணைப்பு வாகனங்களில் வந்த, 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், கொழுந்து விட்டு எரிந்த தீயை சுமார், 2 மணி நேரம் போராடி அணைத்தனர்.

ஆனாலும், கடையில் இருந்த துணிகள் உட்பட ரூ.20 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அனைத்தும் முற்றிலுமாக எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து தில்லைநகர் போலீசார் வழக்குப் பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

First published:

Tags: Local News, Trichy