முகப்பு /செய்தி /திருச்சி / ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார்.. திருச்சியில் பரபரப்பு சம்பவம்!

ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார்.. திருச்சியில் பரபரப்பு சம்பவம்!

துப்பாக்கியால் சுடப்பட்ட ரவுடிகள்

துப்பாக்கியால் சுடப்பட்ட ரவுடிகள்

குழுமாயி அம்மன் கோயில் அருகே நகை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. நகை இருக்கும் இடத்தை கண்டறிய இருவரும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சியில் காவலர்களை அரிவாளால் வெட்டிய ரவுடிகள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

திருச்சி எம்.ஜி.ஆர்.நகரில் வசிக்கும் துரை மற்றும் அவரது சகோதரர் சோமசுந்தரம் மீது கொலை, நகை திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், உறையூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மோகன் என்பவர் நகை திருட்டு தொடர்பாக, துரை, சோமசுந்தரம் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டார்.

குழுமாயி அம்மன் கோயில் அருகே நகை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து நகை இருக்கும் இடத்தை கண்டறிய இருவரும் காவல் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது, துரை, சோமசுந்தரம் ஆகியோர் காவல் ஆய்வாளர் மோகனை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். முட்புதரில் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தி மற்றும் அரிவாளை கொண்டு ஆய்வாளர் மோகன், தலைமை காவலர்கள் சிற்றரசு, அசோக் ஆகியோரை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து காவல்துறையினர் தங்களை தற்காத்து கொள்ள இருவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தி இருவரையும் மடக்கி பிடித்தனர். காயமடைந்த அனைவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிடிபட்ட இருவரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Crime News, Gun shot, Police encounter, Trichy