ஹோம் /நியூஸ் /திருச்சி /

போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டுகள் சிறை... நீதிமன்றம் தீர்ப்பு...

போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டுகள் சிறை... நீதிமன்றம் தீர்ப்பு...

போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டுகள் சிறை

போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டுகள் சிறை

Trichy | லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்லையா, திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறையில் அளித்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tiruchirappalli, India

  திருச்சி பொன்மலைப்பட்டியை சேர்ந்த கோவிந்தசாமி மகன் செல்லையா. இவர் திருச்சி விமான நிலையம் அருகே அரிசி ஆலை நடத்தி வருகிறார். இவரது அரிசி ஆலையில் பணிபுரியும் முனியன் என்பவர் கடந்த, 2009ம் ஆண்டு செல்லையா மீது திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

  அதன்பேரில் செல்லையா மீது வழக்குப்பதிவு செய்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க, அப்போது காவல் ஆய்வாளராக இருந்த முருகேசன் என்பவர் ரூ.5000 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்லையா, திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறையில் அளித்தார்.

  அதன்படி கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி செல்லையாவிடம் இருந்து முருகேசன் லஞ்சம் பெற்றபோது, கையும் களவுமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

  இதையும் படிங்க : 12ம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லையா? - திருச்சியில் தொழில் பழகுநர் சேர்கை முகாமில் நீங்களும் பங்கேற்கலாம்!

  இந்நிலையில், திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைகள் நிறைவடைந்தது. இவ்வழக்கில், முருகேசன் குற்றவாளி என்று உறுதி செய்த நீதிபதி கார்த்திகேயன், காவல் ஆய்வாளர் முருகேசனுக்கு, மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

  செய்தியாளர் : விஜயகோபால் - திருச்சி

  Published by:Karthi K
  First published:

  Tags: Tamilnadu police, Trichy