தீபாவளி பண்டிகையையொட்டி, திருச்சி தெப்பக்குளம் சந்திப்பில், சிறப்பு காவல் உதவி மையத்தை மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் இன்று திறந்து வைத்தார். கண்காணிப்பு கேமரா காட்சிகளை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதைத்தொடர்ந்து காவல் ஆணையர் கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறியபோது, "கடந்தாண்டை விட நடப்பாண்டு, திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் முதல், காந்தி மார்க்கெட் வரை, போக்குவரத்து தேங்காத வகையில் சீர் செய்ய போலீஸ் குழுக்கள் அமைத்துள்ளோம். மேலும் குற்ற நடவடிக்கைகளை தடுக்க தேவையான போலீசாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அண்ணாசாலை முதல், தெப்பக்குளம் வரை, 179 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. காந்தி மார்க்கெட் முதல் சிறப்பு காவல் உதவி மையம் வரை கடந்தாண்டு 23 கேமராக்கள் பொருத்தப்பட்ட நிலையில், தற்போது 36 ஆக உயர்த்தப்பட்டுள்ளது" என்றார்.
மேலும் பேசியவர், தீபாவளி பண்டிகையை ஒட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள், தங்களது வீடுகளை பூட்டிவிட்டு சென்றிருப்பது குறித்து அந்தந்த பகுதியை சேர்ந்த புறக்காவல் நிலையங்கள் மற்றும் காவல் நிலையங்களுக்கு தகவல் அளித்துவிட்டு செல்ல வேண்டும்.
தீபாவளி பண்டிகைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் கடைவீதிகளில், ஆக்கிரமித்துள்ள கடைகளை மாநகராட்சியுடன் இணைந்து அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தீபாவளியன்று இரவு கடைகள் அமைக்க அனுமதிக்கப்படுமா? என்பது குறித்து பரிசீலித்து முடிவெடுக்கப்படும்" என்றார்.
Also see...விழுப்புரத்தில் நாளை பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்
ஆன்லைன் மோசடி
ஆன்லைன் மூலம் பணம் மோசடி செய்வதை தடுப்பது குறித்த கேள்விக்கு, பதிலளித்தவர், "எனக்கே ப்ராடு மெசேஜ்கள் அனுப்புகின்றனர். எனவே, பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற அல்லது குழப்பமான மெசேஜ்கள் குறித்து தெளிவடைய, சைபர் க்ரைம் போலீசாரை தொடர்புக் கொள்ளலாம்.
வெளிநாடு வேலைகளுக்கு செல்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலைக்கு அனுப்பும் ஏஜென்சி குறித்து முன்னரே முழுமையாக விசாரிக்க வேண்டும்" என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Commissioner Office, Online, Trichy