Home /News /trichy /

கையோடு பெயர்ந்து வரும் தார்ச்சாலை.. அமைச்சர் மாவட்டத்திலே இப்படியா? - திருச்சி மக்கள் அதிர்ச்சி

கையோடு பெயர்ந்து வரும் தார்ச்சாலை.. அமைச்சர் மாவட்டத்திலே இப்படியா? - திருச்சி மக்கள் அதிர்ச்சி

கையிலேயே பெயர்ந்து வரும் தார்ச்சாலை... திருச்சி மாநகர மக்கள் அதிர்ச்சி...

கையிலேயே பெயர்ந்து வரும் தார்ச்சாலை... திருச்சி மாநகர மக்கள் அதிர்ச்சி...

Tiruchirappalli | தரமற்ற சாலையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மக்கள் வரிப்பணத்தை வீணடித்த சாலை ஒப்பந்ததாரர் மற்றும் மாநகராட்சி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
திருச்சி மாநகராட்சி, 48வது வார்டுக்கு உட்பட்ட ரஞ்சிதபுரம் கோனார் தெரு, ஔவையார் தெருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக தார்ச் சாலை அமைக்கப்பட்டது. பல லட்ச ரூபாய் மதிப்பில் சுமார், 700 மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த தார்ச்சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், கையில் எடுத்தாலே பெயர்ந்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

அதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, பொன்மலை பகுதிச் செயலாளர் விஜேந்திரன் உள்ளிட்டோர் அப்பகுதியில் சென்று பார்வையிட்டனர். அப்போது, தார்ச்சாலை கையில் எடுத்தாலே பெயர்ந்து கொண்டு வருவதும், குச்சியால் குத்தினாலே பழைய தார்ச்சாலை தெரிவதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, "இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தரமற்ற சாலையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மக்கள் வரிப்பணத்தை வீணடித்த சாலை ஒப்பந்ததாரர் மற்றும் மாநகராட்சி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Also see... சேலத்தில் அரசு பொருட்காட்சி தொடங்கியது...

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரின் சொந்த ஊரிலேயே இப்படி ஊழல் நடக்கிறது என்றால், தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சிகளின் சாலை தரம் எப்படி இருக்கும்? எனவே, மீண்டும் இப்பகுதியில் முறையாக சரியான முறையில் சாலையை அமைக்க வேண்டும். இல்லையென்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்" என்றார்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Damaged, Road Safety, Trichy

அடுத்த செய்தி