Home /News /trichy /

திருச்சி கலெக்டர் பொறுப்பேற்ற கையோடு அரசு மருத்துவமனையில் அதிரடி ஆய்வு!!

திருச்சி கலெக்டர் பொறுப்பேற்ற கையோடு அரசு மருத்துவமனையில் அதிரடி ஆய்வு!!

திருச்சி கலெக்டர் பொறுப்பேற்ற கையோடு அரசு மருத்துவமனையில் அதிரடி ஆய்வு!!

திருச்சி கலெக்டர் பொறுப்பேற்ற கையோடு அரசு மருத்துவமனையில் அதிரடி ஆய்வு!!

திருச்சி மாவட்ட ஆட்சியராக பதவியேற்ற கையோடு பிரதீப் குமார், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சி மாவட்டத்தின் புதிய கலெக்டராக மா.பிரதீப் குமார் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, "குறைதீர்ப்பு முகாம்களில் மக்கள் அளிக்கும் மனுக்களை தீர ஆராய்ந்து, விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன்.

அடிப்படைத் தேவைகளான குடிநீர், தெருவிளக்கு, சாலை மற்றும் விவசாயம், மருத்துவம், கல்வி ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

அதுமட்டுமல்லாமல் ஒருங்கிணைந்த தமிழக அரசின் கலைஞரின் வேளாண் வளர்ச்சித் திட்டம், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், நமக்கு நாமே திட்டம், வீடு தேடி மருத்துவம், எண்ணும் எழுத்தும் ஆகிய திட்டங்களில் மாநிலத்தில் முதன்மை மாவட்டமாக திருச்சியை கொண்டுவர பாடுபடுவேன்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களில் பட்டா மாறுதல் மற்றும் வாரிசு சான்றிதழ் கொடுப்பதற்கு காலதாமதம் ஆகிறது. அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

திருச்சியை பொறுத்தமட்டில், 52 நில அளவையர்கள் மட்டுமே இருக்கின்றார்கள். இதனால் காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தற்போது கிராம நிர்வாக அலுவலர்களும் நிலத்தை அளக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

அது நடைமுறைக்கு வரும்போது சப் டிவிஷன் பட்டா விரைந்து வழங்க முடியும். நான் ஒரு கெமிக்கல் என்ஜினீயரிங் பட்டதாரி. முதலில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் பணியாற்றினேன்.

பின்னர் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்று தூத்துக்குடியில் உதவி கலெக்டராகவும், கும்பகோணத்தில் சப் கலெக்டராகவும் பணியாற்றினேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கஜா புயல் நிவாரணப் பணிகளில் கூடுதல் திட்ட இயக்குனராகவும், ராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியர் ஆகவும் பணியாற்றியிருக்கிறேன்.

எனது சொந்த ஊர் சென்னை. ஐஏஎஸ் ஆன பின்னர் நான்கு ஐந்து மாவட்டங்களில் பணியாற்றிய அனுபவம் இருக்கின்றது.

திருச்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் தாமதமாக நடப்பதாக சொல்கிறார்கள். ஏற்கனவே குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றிய அனுபவம் இருக்கின்றது. ஆகவே ஒப்பந்ததாரர்கள் மற்றும் என்ஜினியர்களை அழைத்து பாதாள சாக்கடைக்கு தோண்டிய குழிகளை மூடி சாலைகளை சீரமைக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

திடீர் ஆய்வு

இன்று மாவட்ட ஆட்சியராக பதவியேற்ற கையோடு பிரதீப் குமார், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவு, உள் நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சைப் பிரிவுகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மருத்துவமனை நிர்வாகிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினார். ஆய்வின்போது, முதல்வர் நேரு, மருத்துவக் கண்காணிப்பாளர் அருண்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 
Published by:Esakki Raja
First published:

Tags: Trichy

அடுத்த செய்தி