ஹோம் /நியூஸ் /திருச்சி /

திருச்சியில் மொபைல் திருடியதாக கைதானவர் காவல் நிலையத்தில் உயிரிழப்பு… லாக் அப் மரணமா? விசாரணை தீவிரம்

திருச்சியில் மொபைல் திருடியதாக கைதானவர் காவல் நிலையத்தில் உயிரிழப்பு… லாக் அப் மரணமா? விசாரணை தீவிரம்

திருச்சி சமயபுரம காவல் நிலையத்தில் உயிரிழந்த முருகானந்தம்.

திருச்சி சமயபுரம காவல் நிலையத்தில் உயிரிழந்த முருகானந்தம்.

தனது தாய் ஏலாம்பாளுடன் (வயது 71) வசித்து வந்த முருகானந்தம், கடந்த, 2021 மார்ச், 23ம் தேதி, அவரை அடித்துக் கொலை செய்திருக்கிறார்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி சமயபுரம் போலீஸ் ஸ்டேஷனில், சமயபுரம் கோயிலில் மொபைல் போன் திருடியதாக ஒப்படைக்க அரியலூர் நபர் அடித்துக் கொல்லப்பட்டாரா? என்ற சர்ச்சை வெடித்துள்ளது.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மொபைல் போன் திருடியதாக, அரியலூர் மாவட்டம் ஓரியூர் நடுத்தெருவை சேர்ந்த அங்கமுத்து மகன் முருகானந்தம் (வயது 41) என்பவரை, இன்று காலை, 7 மணிக்கு, கோயிலில் உள்ள செக்யூரிட்டிகள் பிடித்து, தர்ம அடி கொடுத்து, சமயபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

அவரை போலீசார் விசாரித்து கொண்டிருந்தபோது காலை, 11 மணியளவில் காவல் நிலையத்தில் இருந்து திடீரென அவர் மாயமானார். அவரை தேடியபோது, கழிவறையில் தனது இடுப்பில் இருந்த அரைஞாண் கயிற்றினால் தூக்கிட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்திருந்தார்.

அவர் காவல்நிலையத்தில் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டதாக பரபரப்பு புகார் எழுந்த நிலையில், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார், மண்ணச்சநல்லூர் தாசில்தார் சக்திவேல் நேரில் விசாரணை நடத்தினர்.

திருப்பூரில் 9 போலீசார் அதிரடி இடமாற்றம் ஏன் தெரியுமா?

அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவுச் செய்து, தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக் கைதி ஒருவர், காவல் நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமயபுரம் காவல்நிலையத்தில் உயிரிழந்த முருகானந்தத்திற்கு குடும்பம் என்று ஏதுமில்லை. தனது தாய் ஏலாம்பாளுடன் (வயது 71) வசித்து வந்த முருகானந்தம், கடந்த, 2021 மார்ச், 23ம் தேதி, அவரை  அடித்துக் கொலை செய்திருக்கிறார்

Thanjavur | அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்; புகார் செய்தல், பாதுகாப்பாக இருத்தல்- விவரிக்கும் காவல் ஆய்வாளர்

இவ்வழக்கில் தூத்தூர் காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்ட முருகானந்தம், திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்தவர் மீண்டும் சிறை செல்லவில்லை.

இவரை பிடிக்க பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இன்று மொபைல் போன் திருடி சிக்கி இருக்கிறார். இதன்பின்னர் சமயபுரம் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்து இருக்கிறார்.

Published by:Musthak
First published:

Tags: Crime News, Trichy