ஈரோடு கிழக்கு தேர்தலில் திமுக நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அதற்காக பணிகளை நாங்கள் இப்போதே ஆரம்பித்து விட்டோம் எனஅமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சிராப்பள்ளி கலையரங்கத்தில் இன்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் 1988 பயனாளிகளுக்கு ரூபாய் 11.85 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி, திருச்சி வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு மென்பொருளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “|ஈரோடு தேர்தல் பணிகள் குறித்து முதல்வர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். திமுக நிச்சயம் வெற்றி பெறும் அதற்காக பணிகளை நாங்கள் இப்போதே ஆரம்பித்து விட்டோம். தொடர்ந்து அனைத்து அமைச்சர் பெருமக்களும் ஈரோடு வர உள்ளார்கள் என்றும் அங்கு வந்து ஒன்றரை ஆண்டு காலம் திமுக ஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிக்க இருப்பதாக தெரிவித்தார்,
மேலும் ஈரோடு நகரத்தைப் பொறுத்த அளவில் அடிப்படைத் தேவைகள் என்னென்ன தேவை என்பதை கேட்டறிந்து வாக்குகளை சேகரிக்க இருப்பதாகவும், திமுக நல்ல நிலையில் இருக்கின்றது. முதல்வர் அவராகவே தோழமைக் கட்சிக்கு இந்த தொகுதியை விட்டு தந்து மாண்பை காத்திருக்கிறார் என பேசிய அமைச்சர் கே.என்.நேரு மற்றவர்களைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை என கூறினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின் குமார், கதிரவன் மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: கோவிந்தராஜ்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK, Erode Bypoll, K.N.Nehru, Tamil News