முகப்பு /செய்தி /திருச்சி / ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்க்க வந்தவர் மாடு முட்டி உயிரிழப்பு.. திருச்சி பொத்தமேட்டுப்பட்டி ஜல்லிக்கட்டில் சோகம்

ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்க்க வந்தவர் மாடு முட்டி உயிரிழப்பு.. திருச்சி பொத்தமேட்டுப்பட்டி ஜல்லிக்கட்டில் சோகம்

பொத்தமேட்டுப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி

பொத்தமேட்டுப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி

pothamettupatti jallikattu | ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் பார்வையாளர்கள் என சுமார் 25 பேர் காயமடைந்தன

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பொத்தமேட்டுப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாடு முட்டி படுகாயமடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பொத்தமேட்டுப்பட்டியில் உள்ள புனித வியாகுல மாதா கோயில் திடலில் ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெற்றது. இதில் திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 679 காளைகள் களம் இறக்கப்பட்டன. ஒரு பிரிவுக்கு 25 வீரர்கள் வீதம் 300 வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாமல் ஓடிய காளைகளுக்கும், தங்கக் காசு, வெள்ளிக் காசு, பீரோ உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த போட்டியில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என சுமார் 25 பேர் காயமடைந்தனர். ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த முருகன் என்பவர் மாடு முட்டியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த 2 பேர் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

First published:

Tags: Jallikattu, Local News, Trichy