ஹோம் /நியூஸ் /திருச்சி /

மகள்களிடம் 2வது கணவர் சில்மிஷம்.. கொன்று ஆற்றில் வீசிய மனைவி! - திருச்சியில் பயங்கரம்!

மகள்களிடம் 2வது கணவர் சில்மிஷம்.. கொன்று ஆற்றில் வீசிய மனைவி! - திருச்சியில் பயங்கரம்!

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர்

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர்

Trichy Crime news | 10 ஆண்டுகளுக்கு முன்பு முதல் கணவர் உயிரிழந்த நிலையில், இரண்டாவதாக பிரபு என்பவரை திருமணம் செய்து கொண்டு மகள்களுடன் குடும்பமாக வாழ்ந்து வந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli

திருச்சி மாவட்டம் முசிறி அருகே பெற்ற மகள்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 2வது கணவரை கொலை செய்து ஆற்றில் வீசிய பெண்ணை 4 மாதங்களுக்குப் பிறகு போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த ரேகா என்பவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் இறந்த நிலையில், தனது 3 மகள்களுடன் திருச்சி மாவட்டம் முசிறிக்கு கூலி வேலைக்காக சென்றுள்ளார். அப்போது செங்கல் சூலையில் பணியாற்றியபோது, பிரபு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இதனிடையே, ரேகாவின் மகள்களை, பிரபு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ரேகா, அரிவாள் மற்றும் உருட்டுக் கட்டையால் தாக்கியதில் பிரபு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் உடலை அய்யம்பாளையம் காவிரி ஆற்றில் வீசியுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த நிலையில், ஆற்றிலிருந்து அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியது. 4 மாதங்களாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், மகனை காணவில்லை என பிரபுவின் தந்தை அளித்த புகாரின் பேரில், போலீசாருக்கு துப்பு கிடைத்தது. பின்னர் விசாரணையில் ரேகாவை கண்டறிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

First published:

Tags: Crime News, Local News, Trichy