ஹோம் /நியூஸ் /திருச்சி /

திருச்சி ராமஜெயம்கொலை வழக்கு... இறுதிப்பட்டியலில் 20 குற்றவாளிகள்..!

திருச்சி ராமஜெயம்கொலை வழக்கு... இறுதிப்பட்டியலில் 20 குற்றவாளிகள்..!

ராமஜெயம் கொலை வழக்கு

ராமஜெயம் கொலை வழக்கு

Tiruchirappalli | திருச்சி ராமஜெயம்கொலை வழக்கில் நரைமுடி கணேசன், செந்தில்குமார், தினேஷ், மோகன்ராம் உள்ளிட்ட 20 பேர் தற்போது இறுதிப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி, நடைபயிற்சி சென்றபோது படுகொலை செய்யப்பட்டார். ராமஜெயம் கொலை வழக்கை எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரித்து வருகின்றனர். இதுவரை வழக்கு தொடர்பாக சந்தேகப்படும் நபர்கள் என, 600க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

பாலன் கொலை வழக்கு

இதற்கிடையே, சென்னையை சேர்ந்த எம்எல்ஏ எம்.கே.பாலன் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் தொடர்புடைய, திண்டுக்கல்லை சேர்ந்த நரைமுடி கணேசன், தினேஷ், புதுக்கோட்டையை சேர்ந்த செந்தில்குமார் ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

பாலன் கொலை வழக்கு பாணியிலேயே ராமஜெயம் கொலையும் நடைபெற்று இருப்பதால், அக்குற்றவாளிகளிடம் இருந்து சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.

அதனடிப்படையில், நரைமுடி கணேசன், செந்தில்குமார், தினேஷ், மோகன்ராம் உள்ளிட்ட 20 பேர் தற்போது இறுதிப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

' isDesktop="true" id="822589" youtubeid="_0FY8AHze8U" category="trichy">

இவர்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் நாளை திருச்சி வருகைதரவிருக்கிறார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பழைய காவல் நிலையத்தில் வைத்து இவர்களிடம் விசாரணை நடக்கவிருக்கிறது.

Also see... மகன் இறந்த துக்கத்தில் தற்கொலை செய்துகொண்ட பெற்றோர்

மேலும், விரைவில் இவர்கள் அனைவருக்கும், சென்னை, பெங்களூரு அல்லது ஐதராபாத் ஆகிய இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படவிருப்பதாக, சிறப்பு புலனாய்வுக் குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Crime News, KN Nerhu, Murder case, Trichy