ஹோம் /நியூஸ் /திருச்சி /

திருச்சியை பதறவைத்த ஹீலியம் சிலிண்டர் விபத்து.. பலூன் வியாபாரி சிறையில் அடைப்பு

திருச்சியை பதறவைத்த ஹீலியம் சிலிண்டர் விபத்து.. பலூன் வியாபாரி சிறையில் அடைப்பு

திருச்சி

திருச்சி

திருச்சியில் ஹீலியம் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒரு ஆட்டோ, மூன்று இருசக்கர வாகனங்கள், அருகில் இருந்த நகைக்கடையின் கண்ணாடிகளும் நொறுங்கி சேதமடைந்தன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சியை பதற வைத்த பலூன் வியாபாரி வரும், 17ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே, நேற்று முன்தினம் இரவு, பிரபல ஜவுளி நிறுவன வாசலில், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பலூன் வியாபாரி அனார் சிங் என்பவர் வைத்திருந்த ஹீலியம் சிலிண்டர் வெடித்து, கரூர் மாவட்டம் சின்னதாரபுரத்தை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திருச்சி கீழ அம்பிகாபுரத்தை சேர்ந்த ஜீவானந்தம் (13) என்ற சிறுவன் படுகாயமடைந்து, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவனையில் சிசிச்சை பெற்று வருகிறார். இவரை தவிர, 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று திரும்பினர்.ஒரு ஆட்டோ, மூன்று இருசக்கர வாகனங்கள், அருகில் இருந்த நகைக்கடையின் கண்ணாடிகளும் நொறுங்கி சேதமடைந்தன.

இச்சம்பவம் மூலம், திருச்சியை பதற வைத்த பலூன் வியாபாரி அனார் சிங்கை கோட்டை போலீசார் கைது செய்தனர். திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.நீதிபதி உத்தரவின்பேரில் வரும், 17ம் தேதி வரை, நீதிமன்ற காவலில், திருச்சி மத்தியச் சிறையில் அனார் சிங் அடைக்கப்பட்டார்.

Published by:Ramprasath H
First published:

Tags: Crime News, Tamil News, Trichy