Home /News /trichy /

மத்திய பல்கலைக்கழகங்களால் 10 பைசாவிற்க்கு பிரயோஜனம் இல்லை - அமைச்சர் கே.என்.நேரு அதிரடி பேச்சு

மத்திய பல்கலைக்கழகங்களால் 10 பைசாவிற்க்கு பிரயோஜனம் இல்லை - அமைச்சர் கே.என்.நேரு அதிரடி பேச்சு

அமைச்சர் கே.என்.நேரு

அமைச்சர் கே.என்.நேரு

மத்திய பல்கலைக்கழகம் திருச்சிக்கு ஒன்று  வேண்டும் என அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியிடம் கேட்டதாகவும் அதற்கு அவர் திருச்சி, திருவாரூர், கோவை மாவட்டங்களுக்கு தலா ஒரு மத்திய பல்கலைக்கழகம் கொண்டு வந்தார் என கூறினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
    மத்திய பல்கலைக்கழகங்களால் 10 பைசாவிற்க்கு பிரயோஜனம் இல்லை என அமைச்சர் கே.என்.நேரு பேசியுள்ளார்.

    திருச்சியில் புத்தக திருவிழா செப்டம்பர் 16 முதல் 25 ஆம் தேதி வரை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது.

    இதனை தொடங்கி வைத்த அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், “மாணவர்கள் நிறைய படிக்க வேண்டும். ஏனெனில் நாங்கள் நிறைய மீட்டிங் செல்வோம், அங்கு ஆங்கிலத்தில் பேசுவார்கள் புரிந்துக்கொள்ள கடினமாக இருக்கும். எனவே நன்றாக படிக்க வேண்டும்.” என கூறினார்.

    மத்திய பல்கலைக்கழகம் திருச்சிக்கு ஒன்று  வேண்டும் என அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியிடம் கேட்டதாகவும் அதற்கு அவர் திருச்சி, திருவாரூர், கோவை மாவட்டங்களுக்கு தலா ஒரு மத்திய பல்கலைக்கழகம் கொண்டு வந்தார் என கூறினார்.

    இதையும் வாசிக்க: முதல்வராக இருக்கும்போது கட்சிக்குள்ளேயே எனக்கு குழி பறித்தார்கள் - எடப்பாடி பழனிசாமி பகீர் குற்றச்சாட்டு

    “ஆனால் தற்போதைய நிலையில், மத்திய பல்கலைக்கழகங்களால் 10 பைசாவிற்க்கு பிரோயஜனம் இல்லை. நம்மூர் காரன் படிக்க முடியல நம்மூர் காரன் வேலை செய்ய முடியல" என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

    மேலும் எனவே மத்திய பல்கலைக்கழகமெல்லாம் நமக்கு தேவையில்லை எனவும் இங்கு இருக்கிற பல்கலைக்கழகங்களிலே கற்றுத் தெரிந்தால் சிறப்பாக படிக்கலாம் எனவும் கூறினார்.

    திருச்சி மாநகராட்சி, சென்னை மாநகராட்சி போல விரிவு படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்த அவர், சென்னை, கோவை, மதுரை என்பதை மாற்றி சென்னை, கோவை, திருச்சி என்று வர வேண்டும். அதற்கு உழைக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தனக்கு உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Education, KN Nerhu, NIT, Trichy

    அடுத்த செய்தி