Home /News /trichy /

திருச்சி அருகே நண்பனை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர்.. நட்பை பிரித்த பெண் சகவாசம்..

திருச்சி அருகே நண்பனை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர்.. நட்பை பிரித்த பெண் சகவாசம்..

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவரை மொபைல் போனில் அழைத்து, முத்துப்பாண்டியின் கள்ளத் தொடர்பை காட்டிக் கொடுத்து விட்டாராம்.

திருச்சி அருகே பெண் சகவாசத்தால் ஏற்பட்ட மோதல் காரணமாக நண்பனையே இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காந்திநகர் சுருளி கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் முத்துப்பாண்டி (32). கார் டிரைவர்.

இவரது நண்பர், திருவெறும்பூர் அருகே உள்ள கக்கன் காலனி சேர்ந்த அசோகன் மகன் சக்திக்குமார் (34). இவர், வேன் டிரைவராக இருந்தார்.

சக்தி குமாரின் மனைவி விவாகரத்து பெற்று சென்று விட்டார். இதே பகுதியை திருமணமான பெண் ஒருவருடன் இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

முத்துப்பாண்டி உடனான தொடர்பை கைவிடும்படி அந்தப் பெண்ணிடம் சக்திக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதனால் சக்திக்குமாருக்கும், முத்துப் பாண்டிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

நேற்றிரவு குடிபோதையில் இருந்த சக்திக்குமார், சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவரை மொபைல் போனில் அழைத்து, முத்துப்பாண்டியின் கள்ளத் தொடர்பை காட்டிக் கொடுத்து விட்டாராம்.

இதனால் அந்த பெண்ணின் வீட்டில் பெரிய தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து முத்துப்பாண்டியிடம் முறையிட்ட அந்த பெண் கதறி அழுதுள்ளார். இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்கு சென்ற முத்துப்பாண்டி, அதிகாலை வேளையில் சக்திக்குமார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தூங்கி கொண்டிருந்த சக்திக் குமாரை வெளியே வரவழைத்துள்ளார். தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சக்திக் குமாரை சரமாரியாக குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த சக்திக்குமார்,  தனது வீட்டு வாசலிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்த திருவெறும்பூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சக்திக்குமாரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவுச் செய்து முத்துப் பாண்டியை தேடி வந்தனர்.

இந்நிலையில், நண்பனை குத்திக் கொலை செய்த கத்தியுடன் முத்துப்பாண்டி திருவெறும்பூரில் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்தியச் சிறையில் அடைத்தனர்.
Published by:Esakki Raja
First published:

Tags: Trichy

அடுத்த செய்தி